திமுக, அதிமுகவுக்கு எதிரான இணைந்த கட்சிகள்.. விஜய் தலைமையிலான கூட்டணி பெயர் அறிவிப்பு!

18 hours ago 1
ARTICLE AD

தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான கூட்டணிக்கு புதிய  பெயரை வைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகி பிரவீன் சக்கரவத்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை இடம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, தேர்தலுக்குப் பின்னர் தவெகவுடன் இணைந்தது. மேலும் அமைச்சரவையில் 2 இடங்களைப் பெற்றுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அக்கட்சி நிர்வாகிகளில் ஒருவர் பிரவீன் சக்கரவர்த்தியாவார். காங்கிரஸின் தரவுப் பகுப்பாய்வு மற்றும் தொழில் வல்லுநர்கள் பிரிவின் தலைவராக இருக்கும் இவர், விஜயுடன் தேர்தலுக்கு முன்பு நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் மயிலம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக அதிமுகவின் சி.வி.சண்முகம் தேர்வு செய்யப்பட்டதால் அவர் வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியாக உள்ள அந்த இடம் தமிழக வெற்றிக் கழகம் வசம் கிடைத்தது. இதனால் நாடாளுமன்றத்திற்கு முதல் உறுப்பினரை விஜய் அனுப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையில் இந்த மாநிலங்களவை சீட்டை பெற காங்கிரஸ் கட்சி முயன்றது. அதன் விளைவாக அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகிய இருவரும் முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

எம்.பி.,யாகும் பிரவீன் சக்கரவர்த்தி

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய், காங்கிரஸ் கட்சிக்கு காலியாக  உள்ள ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்கீனார். இதில் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தியை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. இந்த நிலையில் இதற்கு நன்றி தெரிவித்து அவர் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினருக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்.

Also Read: காங்கிரஸ் இல்லாமல் இந்தியா கூட்டணியே இல்லை.. திமுகவை விளாசிய மாணிக்கம் தாகூர்!

என் மீது நம்பிக்கை வைத்த நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி  மற்றும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்” எனவும் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அவருக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Read Entire Article