தாயுமானவர் திட்டம் : 9320 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதல்வர் உதயநிதி!

4 days ago 2
ARTICLE AD

விழுப்புரம் : அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதனை தொடர்ந்து நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 9320 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சட்டமேதை அம்பேத்கரின் 69ஆவது நினைவு நாளை முன்னிட்டு விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் முன்பாக உள்ள அம்பேத்கரின் சிலைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி நடைபெறும் நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 14 அரசுத்துறை சார்பில்9320 பயனாளிகளுக்கு 11970.55 கோடி பதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி. மஸ்தான். விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார். சட்டமன்ற உறுப்பினர்கள், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணம். விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா. உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணண். பாமக மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார். மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர். அதனை தொடர்ந்து விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள், கிளை செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

இன்று மாலை 4 மணி அளவில் விக்கிரவாண்டி அடுத்த சிந்தாமணி பகுதியில் கலைஞரின் முழு உருவ வெங்கல சிலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். அதனை தொடர்ந்து திமுக தெற்கு மாவட்டம் சார்பில் விக்கிரவாண்டில் உள்ள தனியார் கல்லூரியில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள், கிளை செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

Read Entire Article