வந்தேறிகளுக்கு வாழ்வு கொடுத்த திமுக தியாகத்தைப் பற்றி பேசுவது ஆச்சரியமாக இருப்பதாக தவெக நிர்வாகி நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். அவர் திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும்போது இதனைக் குறிப்பிட்டார்.

2026 சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பின் திமுக புத்துணர்ச்சி பெறும் வகையில் அடுத்து கழக கூட்டங்களை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்தி வருகிறது. இதனிடையே மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் உதகமண்டலத்தில் நீலகிரி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

எந்த தியாகமும் செய்யாத தவெக

இதில் பங்கேற்று பேசிய உரையாற்றிய நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தவெகவை சரமாரியாக விமர்சித்தார். அவர் பேசுகையில், “நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தவெக அரசியலுக்கும், பொது வாழ்க்கைக்கும் எந்த தியாகமும் செய்யாமல், அர்ப்பணிப்பும் இல்லாமல் ஒரு கூட்டம் ஆட்சிக்கு வந்துள்ளது. தியாகத்திலேயே வளர்ந்து,கட்சியிலும், ஆட்சிப் பொறுப்பிலும் படிப்படியாக முன்னேறியவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். கட்சியைப் பொறுத்தவரை இளைஞரணி தலைவர், துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர், செயல் தலைவர், தலைவர் என படிப்படியாக வந்தவர்.

<iframe title="CM Vijay Trichy Full Speech | "கல்யாண வீட்டுலையும் புலம்பல்" ஸ்டாலின் மீது அட்டாக் விஜய் FULL SPEECH" src="https://www.youtube.com/embed/iKdVTTlcY-o" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

அதேபோல் ஆட்சிப் பொறுப்பில் மேயர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதலமைச்சர், முதலமைச்சர் என மேலே வந்தவர். கட்சியிலேயும், ஆட்சியிலேயும் தியாகங்களை செய்து சிறைக்கு போய் மிசாவில் இருந்து முதலமைச்சராக இருந்து பணியாற்றிய ஒரு தலைவர் மு.க.ஸ்டாலின் தான். இந்தியாவில் இவரைப் போல யாருமே இல்லை. வேறு எந்த முதலமைச்சரும் இல்லை. இந்த பரிணாம வளர்ச்சி கொண்ட ஒரு தலைவர் மோடியோ, அமித்ஷாவோ இல்லை” என ஆ.ராசா எம்.பி., தெரிவித்தார்.

தியாகம் செய்யாதவர்களெல்லாம் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள் என்று ஆதங்கப்படுகிறார் @dmk_raja .
E.V.வேலு, ரகுபதி, சாத்தூர் ராமச்சந்திரன், @PKSekarbabu , செந்தில்பாலாஜி, தங்கத் தமிழ்செல்வன், @OfficeOfOPS , திண்டுக்கல் லியோனி, திருமாவேலன், போன்ற வந்தேரிகளுக்கு வாழ்வு கொடுத்த @arivalayam…

— Nanjil Sampath (@NanjilPSampath) June 2, 2026

வந்தேறிகளுக்கு வாழ்வு கொடுத்த அறிவாலயம்

இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், “ தியாகம் செய்யாதவர்களெல்லாம் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள் என்று திமுகவின் ஆ.ராசா ஆதங்கப்படுகிறார். ஆனால் எ.வ.வேலு, ரகுபதி, சாத்தூர் ராமச்சந்திரன், சேகர் பாபு, செந்தில் பாலாஜி, தங்கத் தமிழ்செல்வன், ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் லியோனி, திருமாவேலன் போன்ற வந்தேறிகளுக்கு வாழ்வு கொடுத்த இடமான அறிவாலயம், தியாகத்தைப் பற்றி பேசுவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. வாழ்க தியாகிகள்” என பதிலடி கொடுத்துள்ளார்.

Also Read: அமைச்சரவையில் 5 வது இடத்திற்கு தள்ளப்பட்ட செங்கோட்டையன்.! யார் யாருக்கு எந்த இடம்.? வெளியான லிஸ்ட்