"தவெக அமைச்சரவை பட்டியல் ரெடி" - சஸ்பென்ஸை உடைத்த விஜய்; பதவியேற்பு விழா எங்கு தெரியுமா?

1 month ago 5
ARTICLE AD

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் கடந்த வாரம் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், வரும் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என இந்தத் தேர்தலில் நான்கு முனைப்போட்டி இருந்தது. இதில், எது வெல்லும் என்று அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காரணம், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக முதலில் திமுக கூட்டணியே வெல்லும் என்று சொல்லப்பட்டது. அதன்பிறகு, தேர்தல் தேதியை குறித்த பின்னர், அதிமுக பொதுச்செயலளாளர் எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என வேகவேகமாக செயல்பட்டதால் அதிமுக கை கொஞ்சம் ஓங்கி இருந்தது. இபிஎஸ்-ன் பிரச்சாரமும் மிகவும் வீரியமாக இருந்ததால் அதிமுகவுக்கு வாய்ப்பு இருக்கும் என்று கூறப்பட்டது.

தவெகவுக்கு வாய்ப்பு

தேர்தலும் பரபரப்பாக நடந்து முடிந்த நிலையில், வாக்காளர்கள் யாருக்கு ஓட்டுப்போட்டு இருப்பார்கள் என்பது  கணிக்கமுடியாத சூழ்நிலை இருக்கிறது. அதற்கு காரணம் விஜய். ஏனென்றால், இளைஞர்கள் மட்டுமே தவெகவுக்கு வாக்களிப்பார்கள் என்று சொல்லப்பட்ட நிலையில், குடும்பம் குடும்பமாக விஜய்க்கு ஓட்டுப்போட்டுள்ளார்கள் என்று இரண்டு பெரிய கட்சிக்கும் தகவல் வந்துள்ளது. கடைசி நேரத்தில் களம் மாறியிருப்பதால் அரசியல் களமே பரபரப்பாக காணப்படுகிறது. இது இப்படி இருக்க, நாங்கள்தான் வெல்வோம் என்று உறுதியாக நம்பும் தவெகவினர், அரசாங்கத்தை அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

பதவியேற்பு விழா எங்கு?

இதுதொடர்பாக தவெக மூத்த நிர்வாகிகள் பிரபல நாளிதழிடம் சொன்ன தகவலில், “தவெக 180 தொகுதிகளில் வெல்லும் என்பதைக் கட்சித் தலைமை உறுதியாக நம்புகிறது. இப்போதே அமைச்சரவைப் பட்டியல் தயாரிப்பு, அதிகாரிகள் மாற்றுத்துக்கான லிஸ்ட் எனப் பல்வேறு பணிகள் வேகமெடுத்திருக்கின்றன. பதவியேற்பு விழாவை நேரு ஸ்டேடியத்தில் வைத்துக்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையுடன் தொடர்பில் இருந்து, பதவியேற்பு விழாவை சிறப்பாக நடத்திட, செங்கோட்டையின் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட இருக்கிறது. தலைவர் விஜய் உடன் செங்கோட்டையன், விஷ்ணு ரெட்டி உள்ளிட்டோர் கலந்தாலோசித்து, 33 பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டியலைத் தயாரித்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கின்றனர்.

மேலும் படிக்க: ADMK Report : 'மாஜி உளவுத்துறை அதிகாரி கொடுத்த ரிப்போர்ட்' உற்சாகத்தில் எடப்பாடி பழனிசாமி..!

பதவியேற்பு விழா, அமைச்சர்கள் பட்டியல் என தவெகவின் இந்த உறுதியான நம்பிக்கை உண்மையாகுமா? அல்லது ஏமாற்றம் அளிக்குமா? என்று தெரிந்துக்கொள்ள மே 4ஆம் தேதி வரை காத்திருங்கள்.

Read Entire Article