தர்மபுரி மாவட்டத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் 68 கல்லூரிகளில் படிக்கும் 733 மாணவர்கள் மாதாந்திர உதவித் தொகையாக ஆயிரம் பெற்று பயனடைந்து வருகின்றனர் என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆட்சியர் பேசுகையில்,

மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம்

தமிழகத்தில் பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்வதற்காக தொடங்கப்பட்ட புதுமைப்பெண் திட்டம் பெண்களின் உயர் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளியைபோல் அரசு பள்ளிகளில் படித்த ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும், அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை உயர்த்திடவும், தமிழ் புதல்வன் எனும் திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்தார்.

இத்திட்டத்தை முதலில் கோவையில் தொடங்கி வைத்த முதல்வர்

கோவை அரசு கல்லூரியில் கடந்த 9-ஆம் தேதி முதல்வர் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து உயர் கல்வி சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள் பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருக்கேற்றிட உதவும் வகையில் மாதந்தோறும் ரூ. 1000 அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.

தர்மபுரியில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

இதைத்தொடர்ந்து தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்திர உதவித்தொகை ஆயிரம் பெறுவதற்கான பற்று அட்டைகளை வழங்கினார்.

தர்மபுரி மாவட்டத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் 68 கல்லூரிகளில் படிக்கும் 733 மாணவர்கள் மாதாந்திர உதவித் தொகையான ஆயிரம் ரூபாயை பெற்று வருகின்றனர்.

மாணவர்கள் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்த நிதியை சேமிப்பாக வைத்து மேலும் உயர்கல்விக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புத்தகங்கள் வாங்குவது கல்வி சார்ந்த விஷயங்களை மட்டுமே பயன்படுத்தி தங்கள் உயர் கல்விக்கு உத்திரவாதமாக இதையே பயன்படுத்த வேண்டும். அறிவு சார்ந்த சமுதாயம் உருவாகுவதற்கு இந்த நிதியை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

போட்டித் தேர்வுகளுக்கு இந்த உதவி தொகையை பயன்படுத்தி கொள்ள வேண்டும்

ஏதேனும் போட்டி தேர்வுகளுக்கு தேவையான நல்ல புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி கேட்டுக் கொண்டார்.

கல்லூரி மாணவர்கள் சிறந்த கல்வியைக் கற்றால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்

கல்லூரி மாணவர்கள் சிறந்த கல்வியை கற்றால் அவர்கள் சுயமாக தொழில் செய்வது முன்னேறுவதற்கு நல்ல வாய்ப்பாகவும், வேலை வாய்ப்பு பெறவும் உறுதுணையாக அமையும் மாணவர்கள் மனதை வைத்தால் எதையும் சாதிக்கலாம் எளிதில் வெற்றி அடையலாம்.

எனவே அரசால் மாதாந்தோறும் வழங்கப்படும் ஆயிரம் உதவி தொகை பெற்று கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் 68 கல்லூரிகளில் படிக்கும் 733 மாணவர்கள் மாதாந்திர உதவி சேவை பெற்று பயனடைந்து வருகின்றனர் என்றார்