தயாரிப்பாளர்கள் சங்கத்தினரை சந்தித்து அவர்களின் கோரிக்கையை கேட்ட முதல்வர் விஜய்!

2 weeks ago 3
ARTICLE AD

தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களை சந்தித்தார். சட்டவிரோதமாக திரைப்படங்கள் வெளியிடப்படுவது , உள்ளாட்சி அமைப்பின் கேளிக்கை வரி குறைப்பு குறித்து தயாரிப்பாளர் சங்கத்தினர் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளை பொறுமையாக கேட்ட முதல்வர் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உத்தரவாதம் அளித்துள்ளார்

சட்டமன்ற தேர்தலில் தனிப்பெருன்பான்மை கட்சியாக வெற்றிபெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளது. தவெக தலைவர் சி ஜோசப் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வராக விஜய் பதவியேற்றப்பின் சென்ற திமுக ஆட்சியில்  ஏற்கனவே நடைமுறையில் இருந்த சில திட்டங்கள் தொடருவதாக அறிவித்ததுடன் மதுக்கடைகளை  மூடுவது , அம்மா உணவகம் சீரமைப்பு போன்ற புதிய முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளார். விஜய் முதல்வரானதை திரைத்துறைக்கு சாதகமான புதிய மாற்றங்கள் உருவாகும் என அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்க. அந்த வகையில் நேற்று நடப்பு தமிழ் திரைப்பட் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் முதல்வர் விஜயை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்தார்கள். இது குறித்து தயாரிப்பாளர் தனஞ்சயன் யூடியுப் வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்

கோரிக்கைகளை கேட்ட விஜய்

தயாரிப்பாளர் சங்கத்தினரை சந்தித்த முதல்வர் விஜய் அவர்களை முதலில் உட்காரும்படி கேட்டுக்கொண்டார். பின்னர் சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் வெற்றிக்காக அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். தயாரிப்பாளர் சங்கத்தினரின் கோரிக்கைகளை பொறுமையாக கேட்ட விஜய் அவற்றை அமைச்சர் ராஜ்மோகனிடமும் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.  தற்போது தன் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இருப்பதாகவும் உங்களுடைய கோரிக்கைகளை நிச்சயமாக நிறைவேற்றி தருவதாக விஜய் கூறியுள்ளார்

விஜயின் ஜனநாயகன் திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்தது. சட்டவிரோதமாக திரைப்படங்கள் வெளியாவதை தடுக்க சிறப்பு துறை அமைக்க வேண்டும் என விஜயிடம் தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.  இதுபோன்ற பிரச்சினைகளுக்கு ஏற்கனவே ஒரு சைபர் குற்றப் பிரிவு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். ஆனால், பொழுதுபோக்குத் துறைக்கென பிரத்யேகமாக ஒரு சைபர் குற்றப் பிரிவு அமைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

குறிப்பிட்ட 4% மாநில திரைப்பட வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் விஜயிடம் கோரிக்கை வைக்கப்படுள்ளது.  அதற்கு அவர், “ஓ அப்டியா, எல்லாரும் இதை சொல்றீங்க” என்று பதிலளித்தார். மேலும், திரைத்துறைக்காக கமல்ஹாசன் சார் வழங்கிய ஆலோசனைகளை அவர் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டார். கூடுதலாக, கவுன்சிலின் சொந்த ஓடிடி தளத்தைத் தொடங்க நாங்கள் அரசாங்க ஆதரவைக் கோரினோம். அவர் எங்கள் ஆலோசனைகள் அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டார் என தயாரிப்பாளர் தனஞ்சயன் தெரிவித்துள்ளார்

Read Entire Article