தமிழ்நாட்டில் ஜனநாயகன் படத்தை வெளியிடும் ரோமியோ பிக்ச்சர்ஸ்..இத்தனை கோடிக்கு விற்பனையா!

2 weeks ago 3
ARTICLE AD

எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்திற்கான ரிலீஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜனநாயகன் படத்தில் தமிழ்நாடு திரையரங்க ரிலீஸ் விற்பனை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனநாயகன் இசை வெளியீடு

எச் வினோத் இயக்கத்தில் விஜயின் 69 ஆவது மற்றும் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி நாளைய தீர்ப்பு படத்தில் நாயகனாக அறிமுகமானார் விஜய். கடந்த 32 ஆண்டுகளில் பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். பல வருடங்களாக விஜய் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற தனது அரசியல் கட்சியைத் தொடங்கினார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தவெக போட்டியிட இருக்கும் நிலையில் தனது சினிமா கரியரை முழுவதுமாக முடித்துக்கொள்ள இருக்கிறார் விஜய் . இதனால் ஜனநாயகன் படத்தின் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. படத்தின் ரிலீஸ் மட்டுமில்லாமல்  ஜனநாயகன் படத்தின் இசை வெளியீடு வரும் டிசம்பர் 27 ஆம் தேதி மலேசியாவில் மிகபிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது .

ஜனநாயகன் பட்ஜெட்

கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக விஜய் ரூ 275 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனநாயகன் திரையரங்க ரிலீஸ் விற்பனை

விஜயின் கடைசி படமான தி கோட் திரைப்பட கடந்த ஆண்டு மிகப்பெரிய வசூல் ரீதியாக வெற்றிபெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ 103 கோடி வசூல் செய்தது. ஜனநாயகன் படத்திற்கு இருக்கும் பெரும் எதிர்பார்ப்பால் இப்படத்தின் ரிலீஸ் உரிமையை  தயாரிப்பு நிறுவனம் விற்பனை செய்ய முடிவு செய்தது . ஆனால் பல தயாரிப்பு நிறுவனங்கள் ஜனநாயகன் படத்தை வெளியிட தயக்கம் காட்டினர். இப்படியான நிலையில் ரொமியோ பிக்ச்சர்ஸ்  ஜனநாயகன் படத்தின் தமிழ்நாட்டு ரிலீஸ் உரிமையை 120 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read Entire Article