<p>தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. </p>
<p>இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை பெய்யும். ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருப்பூர், திண்டுக்கல், கரூர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>