தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு..! உடனே விண்ணப்பிங்க- கடைசி தேதி அறிவிப்பு

1 week ago 2
ARTICLE AD

தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு

காவல்துறை பணியில் இணைய வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். இதற்காக இரவு பகலாக படித்தும், உடற் தகுதியை அதிகரித்தும் காவல்துறை பணிக்கு தயாராகுவார்கள். இந்த நிலையில் ஒப்பந்த அடிப்படையில் தமிழ்நாடு காவல் துறையில் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு காவல்துறையில் கடலோர பாதுகாப்புக் அதிவிரைவுப்படகுகளை இயக்குதல் மற்றும் பராமரிப்பு குழுமத்திலுள்ள பணிகளுக்காக வருடாந்திர ஒப்பந்த அடிப்படையில் (தேவைப்பட்டால், நீட்டிக்கப்படலாம்) பணிபுரிய 01.12.2025 நாளன்று 50 வயதுக்குக் கீழுள்ள தகுதி வாய்ந்த முன்னாள் இந்திய கடலோர காவல் படை மற்றும் முன்னாள் இந்திய கடற்படை வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பணி விவரம்- மாத ஊதியம்

1.காவல் உதவி ஆய்வாளர் (படகு தொழில்நுட்ப ஆளிநர்)- 5.36900/-மற்றும் இதர படிகள்

2. தலைமை காவலர் (படகு தொழில்நுட்ப ஆளிநர்)- 20600/-மற்றும் இதர படிகள்

விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

தங்களது பூர்த்தி செய்யப்பட்ட தகுதியான விண்ணப்பதாரரர்கள் விண்ணப்பங்களை பரிந்துரைக்கப்பட்ட படிவத்தின்படி உரிய ஆவணங்களுடன் கூடுதல் காவல் துறை இயக்குநர். கடலோர பாதுகாப்பு குழுமம், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகம், டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை. மைலாப்பூர், சென்னை-4 என்ற முகவரிக்கு 17.12.2025-க்குள் தபால் மூலம் அனுப்பலாம்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்து தேர்வு, வாய்மொழி தேர்வு போன்றவற்றுக்கு தனிப்பட்ட அழைப்பு கடிதங்கள் மூலம் அழைக்கப்படுவார்கள். ஆட்சேர்ப்பு, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

தகுதி. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள். மாதிரி விண்ணப்ப படிவம் பின்வரும் இணையதள இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்:
Link: https://drive.google.com/drive/folders/118xcdsoXM9RH-O--ySMT2wJCoEXtWskh என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article