மாரி செல்வராஜின் பைசன்

வாழை படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் பைசன். துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் , ரஜிஷா விஜயன் , லால் , பசுபதி , அழகம்பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பா ரஞ்சித்தின் நீலம் ப்ரோடக்‌ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார். கபடி விளையாட்டை மையமாக வைத்து ஸ்போர்ட்ஸ் டிராமாவாக உருவாகியுள்ள பைசன் படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் முடிவுக்கு வந்தது. இந்த ஆண்டு தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. பைசன் படத்தைத் தொடர்ந்து அடுத்தபடியாக தனுஷ் படத்தை இயக்கவிருப்பதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

தனுஷ் மாரி செல்வராஜ் கூட்டணி

தனுஷ் மாரி செல்வராஜ் கூட்டணி 2021 ஆம் ஆண்டு கர்ணன் திரைப்படம் வெளியானது. தனுஷூக்கு இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கர்ணன் படத்தின் போதே இதே கூட்டணியின் மற்றொரு படமும் உருவாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. தனுஷின் வண்டர்பார் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருந்தது. பட்ஜெட் காரணங்களால் பின் இந்த படம் வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு கைமாறியது. தனுஷ் மாரி செல்வராஜ் கூட்டணியில் இரண்டாவது படம் அப்டேட் வெளியானதில் இருந்து ரசிகர்கள் இந்த படத்திற்காக ஆர்வமாக காத்திருந்து வருகிறார்கள். இப்படியான நிலையில் மாரி செல்வராஜ் இந்த படத்தைப் பற்றி சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளார்

ஜப்பான் சென்ற மாரி செல்வராஜ்

" பைசன் படத்திற்கு அடுத்தபடியாக தனுஷ் படத்தை இயக்கவிருக்கிறேன். கர்ணன் படத்தில் இருந்தே இந்த படத்தை எடுக்க முயற்சி செய்து வருகிறோம். சில காரணங்கள் தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இது பெரிய பொருட்செலவில் உருவாக இருக்கும் படம் . என் கரியரில் ஒரு மைல் கல்லாக இந்த படம் இருக்கும். ஒரு எளிமையான கதையை பெரிய பட்ஜெட்டில் எடுக்க நினைத்திருக்கிறேன். அந்த படத்திற்கான வேலைகள் தொடங்கிவிட்டன. " என மாரி செல்வராஜ் கூறியுள்ளார். இந்த படத்திற்கான திரைக்கதையை எழுதி முடிக்க மாரி செல்வராஜ் ஜப்பான் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

"My Next movie after #Bison will be with #Dhanush sir🤝. We signed the film during Karnan time. Its a big scale project but with a simple storyline🔥. It'll definitely be my milestone film💯"
- #Mariselvarajpic.twitter.com/aymjNudbx1

— AmuthaBharathi (@CinemaWithAB) July 21, 2025