தஞ்சையில் முதல்வர் ஸ்டாலின் வாகனம் சோதனை: தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி

2 weeks ago 3
ARTICLE AD

தஞ்சாவூா்: திருவாரூரில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்காக தஞ்சாவூருக்கு வந்து சாலைமார்க்கமாக சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டு அனுப்பினர்.

தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க மாநிலம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50  ஆயிரத்திற்கும் மேல் கொண்டு செல்லப்படும் ரொக்கம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்படும் ரொக்க பணம் , பொருட்களுக்கு உரிய ஆவணங்களை காண்பித்த பிறகு அவற்றை விடுவித்து வருகின்றனர் .

இந்நிலையில் திருவாரூரில் இன்று மாலை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார் . இதற்காக முதல்வர் இன்று காலையில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தஞ்சை விமானப்படை தளத்திற்கு வந்தார் . பின்னர் அவர் அங்கிருந்து பிரசார வாகனத்தில் சாலை மார்க்கமாக திருவாரூர் நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

இந்த வாகனத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, டி.ஆர்.பி. ராஜா ஆகியோரும் உடன் இருந்தனர். தஞ்சை அருகே சாலியமங்கலம் நால்ரோடு பகுதியில் வாகனம் சென்றபோது அங்கு தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் முதல்வரின் வாகனத்தை நிறுத்தி  சோதனை செய்தனர். வாகனத்தில் இருந்த பைகள் மற்றும் உடமைகளை திறந்து சோதனை இட்டனர் .

இந்த சோதனை ஓரிரு  நிமிடம் நடைபெற்றது. வாகனத்தின் முன்சீட்டில் அமர்ந்து இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பறக்கும் படையினருக்கு ஒத்துழைப்பு அளித்தார். தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்கு பிறகு திருவாரூர் நோக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாகனம் புறப்பட்டு சென்றது.

பொது செலவின பார்வையாளர் ஆய்வு

பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் பொது செலவின பார்வையாளர்  ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் செலவின பார்வையாளர் சஞ்சீவ் குமார் தாலுகா அலுவலகத்திற்கு வருகை புரிந்து தேர்தல் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக தஞ்சாவூர் கும்பகோணம் சாலை வங்காரம்பேட்டையில் நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரிகள் அந்த வழியாக சென்ற வாகனங்களை சோதனை செய்ததையும் செலவின பார்வையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது உடன் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் பாபநாசம் வட்டாட்சியர் சந்தனவேல் உதவி தொடர்பு அலுவலர் மணிகண்டன் கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர் தர்மராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Read Entire Article