தஞ்சையில் தி.மு.க சார்பில் பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டம்
1 month ago 3
ARTICLE AD
தஞ்சாவூர்: தந்தை பெரியாரின் 148-வது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் அவரது உருவப்படத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மண்டல குழு தலைவர் மேத்தா, பேரூர் செயலாளர் கல்யாண சுந்தரம், மாநகரச் செயலாளர் சண் ராமநாதன், மருத்துவ அணி துணைச் செயலாளரும், தஞ்சை மாநகராட்சி மேயருமான அஞ்சுகம்பபூபதி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர்கள் உஷா புண்ணியமூர்த்தி, அமுதா ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகில்வேந்தன், பகுதி செயலாளர்கள் நீலகண்டன், வாஷிம் ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சமூக நீதி நாள் உறுதி மொழியை மத்திய மாவட்ட செயலாளர்  துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். முன்னதாக தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மத்திய மாவட்ட கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் சார்பில் மாலை அணிவிப்பு
தஞ்சையில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா நடைபெற்றது. பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பெரியாரின் உருவ சிலைக்கு மாநகர மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமையில் முன்னாள் மாநகர மாவட்ட தலைவர் பி.ஜி. ராஜேந்திரன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் நிர்வாகிகள் டி.பி.எம்.ராஜு, சுந்தர், ஆதிநாராயணன், பி.ஜி.பிரபாகரன், ஞானசீலன், சந்திரசேகர், லட்சுமி நாராயணன் , இளைஞரணி சச்சின், அசோக், பாஸ்கர் , ராஜ்குமார், செந்தில் சிவகுமார், செபஸ்டின், முருகேசன், சிவமாறன், , ராஜ்குமார், கரந்தை கண்ணன், முனைவர் பிரனேஷ் இன்பென்ட் ராஜ், வடிவேல், முருகன், சண்முகம், விஜயராகவன், குமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவிப்பு
மாவட்ட அ.தி.மு.க சார்பில் தந்தை பெரியார் 148-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகர மாவட்ட செயலாளர் காந்தி தலைமை தாங்கினார். மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் துரை.திருஞானம், எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் துரை.வீரணன், அம்மா  பேரவை இணை செயலாளர் அறிவுடைநம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பெரியார்  உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன்,  மாவட்ட பொருளாளர்கள் பாலை ரவி, அன்புச்செல்வன் ,  மாவட்ட இணை செயலாளர் சாவித்ரி கோபால், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சித்ராஅங்கப்பன் ,   அண்ணா தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் புண்ணியமூர்த்தி.
மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ரங்கப்பா , பகுதி செயலாளர்கள்  மனோகர், சம்பத்,  ராஜராஜன், இளமுருகுசெல்வன், வினோத், பகுதி துணை செயலாளர் தாஸ், ஒன்றிய செயலாளர்கள் கேபிள் செந்தில், கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி , அம்மா பேரவை இணைச் செயலாளர். முருகேசன் , நிர்வாகி ராஜதுரை பாண்டியன்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Read Entire Article