தஞ்சைக்கு வந்தது 1,462 டன் யூரியா உரம்... 25 வேகன்களில் வந்த உர மூட்டைகள்

1 month ago 3
ARTICLE AD

தஞ்சாவூர்: தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி சாகுபடிக்கான ஆயத்தப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் இருந்து சரக்கு ரயில் மூலம் 1,462 டன் யூரியா உரம் நேற்று தஞ்சாவூர் வந்தடைந்தது.

25 வேகன்களில் கொண்டுவரப்பட்ட உரம், தஞ்சை ரயில் நிலையத்தில் இருந்து லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது.

மூன்று போக சாகுபடி

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்த காலத்தில் இருந்து நெல் சாகுபடியில் முக்கிய பங்கு வகித்து வரும் காவிரி டெல்டா பகுதியில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகங்களில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. நெல் மட்டுமின்றி உளுந்து, கரும்பு, வாழை, வெற்றிலை, பருத்தி, எள், மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.

இதற்காக விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட இடுபொருட்கள் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கிடைப்பது மிகவும் அவசியமாக உள்ளது. குறிப்பாக நெல் சாகுபடியில் பயிரின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குவதில் யூரியா உள்ளிட்ட உரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சம்பா சாகுபடி ஆயத்தம்

குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் சம்பா சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளையும் விவசாயிகள் தொடங்கியுள்ளனர். வயல்களை தயார்படுத்துதல், நாற்றங்கால் அமைத்தல், விதைத் தேர்வு உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் விவசாயிகளுக்கு தேவையான உரம் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் வெளிமாநிலங்கள் மற்றும் பிற பகுதிகளில் இருந்து உரங்கள் வரவழைக்கப்பட்டு, வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

5 மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகள்

இதன் ஒரு பகுதியாக சென்னையில் இருந்து சரக்கு ரயிலில் 25 வேகன்களில் 1,462 டன் யூரியா உரம் தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு நேற்று வந்தது. ரயிலில் இருந்து உர மூட்டைகளை இறக்கும் பணி நடைபெற்றதை தொடர்ந்து, அவை லாரிகளில் ஏற்றப்பட்டன.

பின்னர் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு உர மூட்டைகள் பிரித்து அனுப்பப்பட்டன.

சம்பா சாகுபடி தொடங்கும் காலத்தில் யூரியா உள்ளிட்ட உரங்களின் தேவை அதிகரிக்கும் என்பதால், தற்போது வந்துள்ள உர இருப்பு விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், சாகுபடி காலத்தில் உரம் தட்டுப்பாடு ஏற்படாமல் தொடர்ந்து தேவையான அளவு உரங்களை இருப்பு வைத்து, விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் விநியோகம் செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

காவிரி டெல்டாவில் சம்பா சாகுபடி பணிகள் அடுத்தகட்டத்தை எட்டும் நிலையில், உரங்களின் வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதால், விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப உரம் கிடைப்பதை உறுதி செய்வது முக்கியமானதாகியுள்ளது. தற்போது விவசாயிகள் சம்பா, தாளடி பணிகளில் மும்முரமாக உள்ளனர். அடுத்தக்கட்டமாக அவர்களுக்கு பயிர்களுக்கு தேவையான உரங்கள் வேண்டும். அதற்காக வேளாண் துறை முன்கூட்டியே நடவடிக்கை எடுத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சாகுபடி பணிகளில் எவ்வித தேக்கமும் இருக்காது என்பதும் விவசாயிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article