தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஆவணிப் பெருந்திருவிழா கொடியேற்றம்

4 months ago 4
ARTICLE AD

தஞ்சாவூர்: மிகவும் பிரசித்திப் பெற்ற தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஆவணிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் - திருவாரூர் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புன்னைநல்லூர் என்ற ஊரில் அருள்பாலிக்கிறார் அன்னை புன்னை நல்லூர் மாரியம்மன். 1680-ம் ஆண்டு, தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மன்னர் சமயபுரம் வந்து அங்கு அருள்புரியும் மாரியம்மனை தரிசித்துவிட்டு அன்று இரவு அங்கு தங்கினார். அயர்ந்து அவர் உறங்கி கொண்டிருந்தபோது அவர் கனவில் அன்னை தோன்றினாள்.

தஞ்சைக்கு ஐந்து கி.மீ தொலைவில் உள்ள புன்னை மரக்காட்டில் புற்று உருவாய் தான் அருள்பாலிப்பதாகவும் அங்கு வந்து தன்னை தரிசிக்கும்படியும் கூறி அன்னை மறைந்தாள். மறுநாள் தஞ்சை திரும்பிய மன்னர் தான் கனவில் கண்ட இடத்தை தேடி புறப்பட்டார். அங்குள்ள புன்னை வனக்காட்டில் எழுந்தருளியிருந்த புற்று அம்மனைக் கண்டுபிடித்தார்.

ஒரு கூரை கொட்டகை அமைத்து அம்மனை மக்கள் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்தார். அந்த இடத்திற்கு புன்னைநல்லூர் என்று பெயர் வைத்தார். வெங்கோஜி மன்னருக்கு பின் அவரது மகன் துலஜ ராஜா பட்டத்திற்கு வந்தார். ஒரு சமயம் அவருடைய மகளுக்கு அம்மை நோய் கண்டது. என்ன வைத்தியம் பார்த்தும் நோயின் கடுமை குறையவில்லை. அந்த சிறுமியின் பார்வையும் அந்த நோயால் பறிபோனது. மன்னர் மனம் வருந்தினார், வேதனைபட்டார், செய்வது அறியாது திகைத்து நின்றார். அன்று அவர் கனவில் ஒரு சிறுமி வந்தாள். உன் மகளுடன் என் சன்னதிக்கு வா என்று கூறினாள் அந்தச் சிறுமி.

மன்னருக்கு புரிந்தது. கனவில் வந்த சிறுமி வேறு யாருமல்ல. புன்னை நல்லூர் மாரியம்மன் தான் என உணர்ந்தார். மறுநாள் தன் மகளுடன் அன்னையின் சன்னதியில் போய் நின்றார். தீபம் ஏற்றி வழிபட்டார். கண்களில் கண்ணீர் வழிய மனம் உருகி அன்னையிடம் மன்றாடினார்.

அப்போது மின்னலாய் ஒரு ஒளி அவரை கடந்து அவரது மகளை அடைந்தது. அவர் மகள் பார்வையை மீண்டும் பெற்றாள். அன்னையின் கருணையை கண்டு மனம் சிலிர்த்தார் மன்னர். அதே இடத்தில் சுற்றுச் சுவர்களுடன் அன்னைக்கு ஓர் ஆலயம் கட்டினார்.  புற்று உருவில் இருந்த அன்னைக்கு உருவம் கொடுக்க விரும்பினார் மன்னர். ஞானி சதாசிவ பிரம்மேந்திரரின் உதவியுடன் அம்மனுக்கு வடிவம் அமைத்து சக்கர பிரதிஷ்டையும் செய்தார்.

மூலஸ்தான அம்மன் புற்று மண்ணால் உருவானதால், மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக உற்சவ அம்மனுக்கு தான் அபிஷேகம் நடைபெறுகிறது.  அழகிய ராஜ கோபுரம், விமானம், மகா மண்டபம், நர்த்தன மண்டபம் மற்றும் மூன்று திருச்சுற்றுகளுடன் ஆலயம் அமைந்துள்ளது. பக்தர்களின் மத்தியில் இக்கோயில் அம்மன் மிகவும் பிரசித்தி பெற்றவர். வேண்டுதலை நிறைவேற்றுவதால் புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றனர்.

இத்தகைய பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆவணி பெருந்திருவிழாவை ஒட்டி கோயில் வளாகத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் அம்மன் படிச்சட்டத்தில் எழுந்தருளியதைத் தொடர்ந்து, கொடி மரத்துக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன. இதையடுத்து, அம்மன் வீதி உலா நடைபெற்றது. மேலும் மாரியம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

ஆவணி முதல் வார ஞாயிற்றுக்கிழமையான நாளை ஆகஸ்ட் 17ம் தேதி சிம்ம வாகனத்திலும், இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமையான ஆகஸ்ட் 24ம் தேதி அன்ன வாகனத்திலும், மூன்றாவது வாரமான ஆகஸ்ட் 31ம் தேதி சிம்ம வாகனத்திலும் அம்மன் புறப்பாடு நடைபெறவுள்ளது.

மேலும், செப்டம்பர் 6ம் தேதி பெரிய காப்பு, படிச்சட்டத்தில் அம்மன் புறப்பாடு, நான்காம் வார ஞாயிற்றுக்கிழமையான 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்மன் புறப்பாடு, ஐந்தாம் வார ஞாயிற்றுக்கிழமையான செப்டம்பர் 14ம் தேதி திருத்தேரோட்டம், 16ம் தேதி தேதி கொடியிறக்கம், விடையாற்றி அபிஷேகம், அக்டோபர் 5ம் தேதி தெப்பத் திருவிழா, 7ம் தேதி தெப்ப விடையாற்றி விழா ஆகியவை நடைபெறவுள்ளன.

Read Entire Article