குதிரை பேரம் மூலமாக MLAக்களை விலைக்கு வாங்கி ராஜினாமா செய்ய வைத்து. மீண்டும் தேர்தலில் போட்டியிட வைக்கிறார்கள். மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக செய்திருப்பது கண்டிக்கத்தக்கது இந்த தேர்தல் மூலமாக நாட்டு மக்கள் தவெகவிற்கு பாடத்தை வழங்குவார்கள்.

தொழில் துறை அமைச்சர் மற்றும் அவரது செயலாளரை அழைத்துச் செல்லவில்லை

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்...," மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றுள்ளது. இந்தக் குடமுழுக்கு விழா பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு இறைவனை பிரார்த்தனை செய்திருக்கும் நல்ல நேரத்தில் உங்களை சந்திக்கிறேன். தமிழக முதல்வர் அண்மையில் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றுள்ளார். இன்று தமிழகம் திரும்புவதாக ஊடகத்தில் செய்தி வந்துள்ளது. தொழில் முதலீட்டை ஈற்பதற்காக சென்று உள்ள முதல்வர் தொழில் துறை அமைச்சர் மற்றும் அவரது செயலாளரை அழைத்துச் செல்லவில்லை. அவர்களை அழைத்துச் சென்று இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால் சம்பந்தமில்லாத அதிகாரிகளை அழைத்துச் சென்று முதலீடுகளை மேற்கொள்ளாத பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. தமிழகத்தில் சுமார் 32 இடங்களில் மதர் சன் நிறுவனம் உள்ளது. சென்னையில் அதற்கு அலுவலகம் இருப்பதாக தகவல் வந்துள்ளது. அப்படி இருக்கும்போது முதல்வர் லண்டனில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாக பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. இந்தியாவில் அலுவலகம் இருக்கும்போது அங்கே சென்று புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது ஏன். தொழில் முதலீடை ஈர்க்க சென்றுள்ளாரா இன்ப சுற்றுலா சென்றுள்ளாரா என மக்கள் கேட்கும் அளவில் உள்ளது.

மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்

மீனவர்கள் வசிக்கும் பகுதி, கடலோரப் பகுதி, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதி, குடியிருப்பு பகுதி இருக்கும் இடத்தில் இப்படி நெருக்கடியான இடத்தில் தலைமை செயலகம் கட்டுவது எந்த விதத்தில் சரியான இந்த அரசு உணர்ந்து மாற்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. தென்காசி மாவட்டத்தில் வயதான பஞ்சு வியாபாரியை காரில் கடத்தி அவர் அணிந்திருந்த சங்கிலியை பறித்துவிட்டு அவர் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்கள். சட்ட ஒழுங்கு சந்தி சிரித்து கொண்டிருக்கிறது. தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்த பிறகும் கொள்ளை, கொலை, பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை. அந்த அளவிற்கு மோசமான ஆட்சி நடைபெறுகிறது. தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு பிறகு தான் அதிக ஊழல் நடைபெற்று உள்ளது. முன்பு கொடுத்ததை வாங்கினார்கள் இப்போது டிமாண்ட் செய்து வாங்குகிறார்கள். இந்த ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி பணங்களை கைப்பற்றியதாக தகவல் வருகிறது. அப்படி என்றால் ஊழல் நடைபெறுகிறது என்றுதானே அர்த்தம். இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நாலே மாதத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். முதலில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி பணி கடன் தள்ளுபடி என்று சொன்னார்கள்.