டேங்கை நிரப்பினால் 676 கிலோமீட்டர் பறக்கலாம்.. Yamaha FZ Rave விலை எப்படி?

3 weeks ago 5
ARTICLE AD

இந்தியாவில் அதிகளவு விற்பனையாகும் இரு சக்கர வாகனங்களில் முதன்மையானது யமஹா. யமஹா நிறுவனம் பல்வேறு மாடல் இருசக்கர வாகனங்களை தயாரித்து வருகிறது. இந்தியாவில் மிகவும் பிரபலமான யமஹா நிறுவனத்தின் பைக்  Yamaha FZ ஆகும். இதன் பல்வேறு மாடல்களில் மிகவும் முக்கியமான மாடல் Yamaha FZ Rave.

Yamaha FZ Rave விலை:

இந்த Yamaha FZ Rave பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 48 ஆயிரத்து 441 ஆகும். இதில் இது ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே ஆகும். இந்த வாகனத்தில்149 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்ட வாகனம். இதில் 5 கியர்கள் உள்ளது. இந்த Yamaha FZ Rave 52 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதன் எடை 136 கிலோ ஆகும்.

மைலேஜ்:

இதில் 13 லிட்டர் வரை பெட்ரோல் தாங்கும் திறன் உள்ளது. 790 மி.மீட்டர் இருக்கை உயரம் உள்ளது. இந்த வாகனம் கருப்பு மற்றும் வெள்ளி நிறத்தில் உள்ளது. 13.3 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 7 ஆயிரத்து 250 ஆர்பிஎம் பவர் கொண்டது. லிட்டருக்கு 52 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது.

ஒரு கியரை கீழே இறக்கி, அடுத்த 4 கியரை மேலே ஏற்ற வேண்டும். ஒரு முறை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 676 கிலோமீட்டர் வரை மைலேஜ் கிடைக்கிறது.  இதன் எஞ்ஜின் 1 சிலிண்டர், ஏர் கூல்ட் 2 வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளது.

வாரண்டி:

இதில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 17 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர் உள்ளது.

முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் சுவிங்ஆர்ம் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. ரிசர்வ்ட் தொகுதியில் 1.7 லிட்டர் வரை உள்ளது. 30 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 2 வருடம் வாரண்டி அளிக்கப்படுகிறது.

எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம் உள்ளது. கியர் இண்டிகேட்டர் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது.  யமஹாவின் இந்த பைக்கிற்கு என்று வாடிக்கையாளர்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. இந்த வாகனம் இளைஞர்களுக்கு பிடித்தமான வாகனத்தில் முதன்மையானதாக உள்ளது. நெடுஞ்சாலைகளிலும், நகர்ப்புறங்களிலும் செல்வதற்கு மிகவும் உகந்த வாகனமாக இந்த வாகனம் உள்ளது. கேடிஎம், என்எஸ்200 போன்ற பைக்குகளுக்கு இந்த பைக் கடும் சவால் அளிக்கும் வகையில் உள்ளது. இதன் உறுதித்தன்மையும் மற்ற வாகனங்களைக் காட்டிலும் அதிகளவு உள்ளது.

Read Entire Article