டூரிஸ்ட் பேமிலி படத்துக்கு எதிரா கேஸ் போட சொன்னாங்க.. நடிகர் தியாகராஜன் மறுத்தது ஏன்?

6 months ago 5
ARTICLE AD

தமிழில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. சசிகுமார், சிம்ரன் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. குடும்ப உறவுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றதுடன் வர்த்தக ரீதியாகவும் 75 கோடி ரூபாய் வசூல் செய்தது.

டூரீஸ்ட் பேமிலி படத்தில் மலையனூர் நாட்டாமை பாடல்:

இந்த படத்தில் மலையனூர் நாட்டாமை என்ற பிரசாந்தின் மலையனூர் மம்பட்டியான் பட ரீமேக் பாடல் இடம்பெற்றிருக்கும். இந்த பாடல் குறித்து மலையனூர் மம்பட்டியான் பட தயாரிப்பாளரும், நடிகர் மற்றும் இயக்குனருமான பிரசாந்தின் தந்தை தியாகராஜன் கூறியதாவது,

"டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றிக்கு அந்த இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும், அதில் நடித்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்த படத்தில் மம்பட்டியான் பாடலை பயன்படுத்தனும்னு நினைச்ச இயக்குனருக்கு என்னுடைய வாழ்த்துகள். மலையனூர் நாட்டாமை பாட்டு இப்போ எல்லா கல்யாண வீட்டுலயும் போட்றாங்க. கேரளாவா இருக்கட்டும், ஆந்திராவாக இருக்கட்டும் தமிழ் பாட்டை வச்சு கல்யாண பெண்கள் டான்ஸ் ஆடிகிட்டே வர்ற விஷயங்களை நிறைய யூ டியூப்ல பாக்குறோம்.

கேஸ் போட சொன்னாங்க:

அந்த பாடல் இந்தளவு பிரபலமா இருக்குறது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. என்கிட்ட யாரும் பெர்மிசன் கேக்கல. படத்துல யூஸ் பண்ணாங்க. நிறைய பேரு கேட்டாங்க நீங்க ஏன் கேஸ் போடக்கூடாதுனு? நம்மளோட சாங்கை ஒருத்தவங்க யூஸ் பண்றாங்க. படத்தோட வெற்றிக்கு அது ஒரு உறுதுணையா இருந்ததுல நான் சந்தோஷப்பட்றேன்.

நான்தான் காசு கொடுக்கனும்:

இது மூலமாக நான் கேஸ் போட்டு காசை புடுங்கனும்னு எண்ணம் எனக்கு வரவே இல்ல. அவங்களை கூப்பிட்டு வாழ்த்துதான் சொன்னேனே தவிர, என் பாட்டை ஏன் யூஸ் பண்ணீங்க? எனக்கு இவ்ளோ வேணும்னு சாெல்லி கேக்கனும்னு கூட எனக்கு தோணல. அது எதுக்கு? நம்ம பாட்டுக்கு அது ஒரு மரியாதை. அந்த பாட்டை அந்த படத்துல யூஸ் பண்ணும்போது இன்னும் பல கோடி மக்கள் அதை பாக்குறாங்க. அதுக்கு மீண்டும் மதிப்பு உண்டாகும்போது நான்தான் அதுக்கு காசு கொடுக்கனும்."

இவ்வாறு அவர் பேசினார்.

அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் சசிகுமார், சிம்ரன் ஆகியோருடன் யோகிபாபு, ரமேஷ் திலக், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஜெகன், எம்.எஸ்.பாஸ்கர்,  இளங்கோ குமரவேல், பகவதி பெருமாள் ஆகியோர் நடித்திருப்பார்கள். மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் - எம்.ஆர்.பி. என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் நசரேத் பசிலியன், மகேஷ் ராஜ் பசிலியன் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

மலையனூர் மம்பட்டியான் டூ மம்பட்டியான்:

இந்த படத்தில் ஒரு காட்சியில் மலையனூர் நாட்டாமை பாடல் இடம்பெற்றிருக்கும். இந்த பாடல் வரும்போது திரையரங்கில் மாபெரும் கைதட்டல்கள் கிடைக்கும். 1983ம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் உருவான திரைப்படம் மலையனூர் மம்பட்டியான். இந்த படத்தில் தியாகராஜன், சரிதா, ஜெய்சங்கர் மற்றும் சில்க் ஸ்மிதா ஆகியோர் நடித்திருப்பார்கள். இளையராஜா இசையமைத்த இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இதேபடத்தை தனது மகன் பிரசாந்தை வைத்து மம்பட்டியான் என்ற பெயரில் தியாகராஜன் 2011ம் ஆண்டு தயாரித்து, இயக்கி வெளியிட்டார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த படத்தில் தமன் இசையமைத்த மலையனூர் நாட்டாமை பாடல் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது வரை திருமண வீடுகளில் மணமகள் என்ட்ரிக்கு இந்த பாடலே ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

Read Entire Article