TVK Vijay alliance: விஜய்யின் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட பாஜக.? கூட்டணி பிளானில் திடீர் ட்விஸ்ட்

2 hours ago 1
ARTICLE AD

தேர்தலை எதிர்கொள்ள திட்டமிடும் அரசியல் கட்சிகள்

தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என மும்முரமாக களத்தில் இறங்கி உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 4 முனை போட்டியானது தற்போது வரை உறுதியாகியுள்ளது. திமுக- அதிமுக- தவெக - நாம் தமிழர் என 4 அணிகள் களத்தில் இறங்கவுள்ளது. எனவே இந்த தேர்தலில் திமுக- அதிமுகவிற்கு நடிகர் விஜய்யின் தவெக கடும் டப் பைட் கொடுக்கும் என கணிக்கப்பட்டுளது. அதிலும் தமிழகத்தில் அடுத்த முதலமைச்சர் விஜய் தான் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள. அதற்கு ஏற்ப தமிழகம் முழுவதும் முதல் தலைமுறை வாக்காளர்கள் விஜய்க்கு ஆதரவாக உள்ளனர்.

புதுச்சேரியில் விஜய் போடும் கூட்டணி பிளான்

அதே நேரம் 2026ஆம் ஆண்டில் தமிழகம் மட்டுமில்லாமல் கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே தமிழகத்தை போலவே புதுவையிலும் கால் பதிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மொத்தமுள்ள 30 தொகுதிகளில், 16 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக- என்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியிலும் கால் பதிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். தமிழகத்தை போல புதுச்சேரியிலும் விஜய்க்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. எனவே சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட விஜய் முடிவு செய்திருந்தார். இதற்கு ஏற்ப கரூரில் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் விஜய்க்கு கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை.

பாஜகவை விளாசிய விஜய்

எனவே நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பராக இருப்பவர் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அவரது உதவியோடு புதுச்சேரியில் கடந்த வாரம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய விஜய், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை புகழ்ந்து பேசினார். ஆனால் கூட்டணியில் உள்ள பாஜகவை கடுமையாக விமர்சித்தார். புதுச்சேரியில் வேலைவாய்ப்பு இல்லை, ரேஷன் கடைகள் இல்லை, புதிய தொழிற்சாலைகள் இல்லை, அடிப்படை திட்டங்கள் செயல்படவில்லையென குற்றம்சாட்டியிருந்தார். எனவே 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக பரவலாக பேசப்பட்டு வந்தது.

என்ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்யின் கூட்டணி திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது பாஜக, புதுச்சேரிக்கு வந்துள்ள பாஜக புதிய செயல் தலைவர் நிதின் நிபின், இன்று காலை என் ஆர் காங்கிரஸ் தலைவரும், புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமியை சந்தித்து பேசினார். அப்போது 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்வது குறித்தும், கடந்த முறையைவிட கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த முறை பாஜகவிற்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விஜய்க்கு ஷாக் கொடுத்த ரங்கசாமி

என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பாஜக தலைவரை சந்திக்காமல் தவிர்க்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில், கூட்டணி தொடர்பாக  பேச்சுவார்த்தை நடந்திருப்பது தவெகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு பிறகு பாஜக புதிய செயல் தலைவர் நிதின் நிபின் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் இன்று மாலை ஆலோசனை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article