இந்தியாவில் மிகவும் பிரபலமான இரு சக்கர வாகனங்களில் ஒன்றாக திகழ்வது கேடிஎம். இவர்களின் பைக்குகளுக்கு என்று இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இவர்களின் ஆஃப் ரோட் பைக்கான KTM 390 Adventure சாகசத்திற்கான சிறந்த பைக்காக உள்ளது.

KTM 390 Adventure:

இந்த KTM 390 Adventure பைக் பற்றி கீழே விரிவாக காணலாம். இந்த பைக்கின் விலை ரூபாய் 3 லட்சத்து 31 ஆயிரத்து 476. இதில் 349.32 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளத. இந்த பைக்கைப் பொறுத்தமட்டில் இதில் 6 கியர்கள் உள்ளது. இதன் எடை 181 கிலோ ஆகும்.

சிறப்புகள்:

இந்த பைக்கில் 14.5 லிட்டர் வரை பெட்ரோல் டேங்கர் உள்ளது. 40.93 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணத்தில் இந்த பைக் உள்ளது. 33.5 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 1 கியர் கீழேவும், மற்ற 5 கியர்கள் மேலேவும் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ரீட், ரெயின் மற்றும் ஆஃப் ரோட் மோட்களில் உள்ளது.

1 சிலிண்டர், லிக்யூட் கூல்ட் மற்றும் 4 வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளது. இது பிஎஸ்6 பாஸ் 2 பி ஆகும். சுவிட்சபிள் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

முன்பக்கம் 19 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 17 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. யுஎஸ்டி ஃபோர்க்ஸ் சஸ்பென்சன் முன்பக்கமும், பின்பக்கம் மோனோஷாக் அப்சார்பெரும் பொருத்தப்பட்டுள்ளது. 181 கிலோ எடை கொண்டது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 228 மி.மீட்டர் ஆகும்.

5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் மொபைல் போன் கனெக்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டலில் உள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டலில் உள்ளது. டேகோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர், லோ பேட்டரி இண்டிகேட்டர், லோ ஃப்யூல் இண்டிகேட்டர் வசதி உள்ளது.

வசதிகள்:

சர்வீஸ் ரிமைண்டர் இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹைபீம் இண்டிகேட்டர்உள்ளது. எஞ்ஜின் டெம்பரேச்சர் இண்டிகேட்டர் வசதி உள்ளது. மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால்/எஸ்எம்எஸ் அலார்ட் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. ட்ராக்ஷன் கன்ட்ரோல் வசதி உள்ளது.

எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. டிஆர்எல்எஸ் வசதி உள்ளது. ப்ரேக்/டெயில் விளக்குகள் எல்இடி-யில் பொருத்தப்பட்டுள்ளது. சாகச பயணம் செல்ல விரும்புபவர்களுக்கு இந்த பைக் மிகவும் உகந்தது ஆகும்.