ஜாமீனை ரத்து செய்த உச்சநீதிமன்றம்.. நடிகர் தர்ஷன் தோழியுடன் கைது.. சோகத்தில் ரசிகர்கள்!

4 months ago 5
ARTICLE AD
<p>கன்னட திரையுலகில் டாப் ஸ்டாராக திகழ்பவர் தர்ஷன். இவர், சித்துரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்பவரை கொலை செய்த வழக்கில் கடந்தாண்டு பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து நசடிகை பவித்ரா கவுடாவும் கைது செய்யப்பட்டார். பின்னர் கர்நாடக உயர்நீதிமன்றம் இவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரது தோழி பவித்ரா கவுடாவும் ஜாமீனில் வெளியே வந்தார்.&nbsp;</p> <p>இந்நிலையில், நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கொலை வழக்கில் ஜாமீன் வழங்கியது போன்று தெரியவில்லை. விடுதலை அளிக்கப்பட்டது போன்று உத்தரவு எழுதப்பட்டிருக்கிறது என கடுமையாக பெங்களூரு உயர்நீதிமன்றத்தை உச்சநீதிமன்றம் சாடியது. இதைத்தொடர்ந்து நடிகர் தர்ஷன் டெவில் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதற்காக வெளிநாட்டிற்கு படப்பிடிப்புக்காக சென்றிருந்தார்.&nbsp;</p> <p>இந்நிலையில், தர்ஷந் ஜாமீனுக்கு எதிரான கர்நாடக அரசின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, நடிகர் தர்ஷன் உட்பட 7 பேருக்கு வழங்கிய ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை என்றும் அறிவுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின் படி நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு சிறப்பு சலுகை கூடாது என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>
Read Entire Article