ஜஸ்டில் ஜெயிச்ச எம்.எல்.ஏ.க்கள்.. கருணாநிதி முதல் துரைமுருகன் வரை - யார்? யார்?

3 weeks ago 4
ARTICLE AD

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாத காலகட்டமே உள்ளது. தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வில் ஒவ்வொரு கட்சியினரும் மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். தேர்தலில் ஒவ்வொரு வாக்குகளுமே ஒரு வேட்பாளரின் வெற்றி வாய்ப்பை மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்டது.

அந்த வகையில், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் யார்? யார்? என்ற பட்டியலை கீழே காணலாம்.

ஜெ. கருணாநிதி:

தி.நகர் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜெ.கருணாநிதி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சத்தியநாராயணனை விட வெறும் 137 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று எம்.எல்.ஏ.வானார். கருணாநிதி 56 ஆயிரத்து 35 வாக்குகள் பெற்றார். சத்தியநாராயணன் 55 ஆயிரத்து 898 வாக்குகள் பெற்றார்.

சி.கே.சரஸ்வதி:

மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசனை விட 281 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார் பாஜக வேட்பாளர் சி.சரஸ்வதி. சுப்புலட்சுமி ஜெகதீசன் 77 ஆயிரத்து 844 வாக்குகள் பெற, பாஜக வேட்பாளரான சி.சரஸ்வதி 78 ஆயிரத்து 125 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

பழனி:

காங்கிரஸ் சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட பழனி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியனைக் காட்டிலும் 370 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். பழனி 89 ஆயிரத்து 315 வாக்குகள் பெற்றார். செல்வமோகன்தாஸ் 88 ஆயிரத்து 945 வாக்குகள் பெற்றார்.

சதாசிவம்:

மேட்டூர் தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சதாசிவம் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஸ்ரீனிவாச பெருமாளைக் காட்டிலும் 656 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். சதாசிவம் 97 ஆயிரத்து 55 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளரான ஸ்ரீனிவாச பெருமாள் 96 ஆயிரத்து 399 வாக்குகள் பெற்றார். இந்த தொகுதியில் நோட்டாவிற்கு மட்டும் 2 ஆயிரத்து 247 வாக்குகள் கிடைத்தது.

துரைமுருகன்:

திமுக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் காட்பாடி தொகுதியில் வெறும் 746 வாக்குகள் வித்தியாசத்திலே வெற்றி பெற்றார். துரைமுருகன் 85 ஆயிரத்து 140 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வி.ராமு 84 ஆயிரத்து 394 வாக்குகள் பெற்றார். மிகுந்த பரபரப்பிற்கு மத்தியில் துரைமுருகன் வெற்றி பெற்றார்.

அசோக்குமார்:

கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அசோக்குமார் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செங்குட்டுவனைக் காட்டிலும் 794 வாக்காளர்கள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். செங்குட்டுவன் 95 ஆயிரத்து 256 வாக்குகள் பெற அசோக்குமார் 96 ஆயிரத்து 050 வாக்குகள் பெற்றார்.

ராதாகிருஷ்ணன்:

விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன், தனக்கு எதிராக போட்டியிட்ட பாமக வேட்பாளர் கார்த்திகேயனைக் காட்டிலும் 862 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். ராதாகிருஷ்ணன் 77 ஆயிரத்து 64 வாக்குகள் பெற, கார்த்திகேயன் 76 ஆயிரத்து 202 வாக்குகள் பெற்றார்.

சபாராஜேந்திரன்:

நெய்வேலி தொகுதியில் போட்டியிட்ட சபா ராஜேந்திரன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஜெகனைக் காட்டிலும் 977 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.  திமுக வேட்பாளரான சபா ராஜேந்திரன் 75 ஆயிரத்து 177 வாக்குகள் பெற, பாமக வேட்பாளர் ஜெகன் 74 ஆயிரத்து 200 வாக்குகள் பெற்றார்.

இந்த தொகுதிகளில் சில தொகுதிகளில் வேட்பாளர்கள் வெற்றி பெற்ற வாக்குகளை காட்டிலும் நோட்டா-விற்கு கிடைத்த வாக்குகள் மிக அதிகம். மேலும், மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் வாக்குகளை பிரித்தது.

Read Entire Article