<p>விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தை இணையத்தில் வெளியிட்டவர்களை கண்டுபிடிக்க படக்குழு மிகத்திவீர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஜனநாயகன் படத்தின் படத்தொகுப்பாளர் பிரதீப் இ ராகவ் படத்தை இணையத்தில் கசியவிட்டதாக குற்றசாட்டுகள் எழுந்து வரும் நிலையில் தென் இந்திய படத்தொகுப்பாளர் சங்கம் இதுகுறித்து விளக்கமளித்துள்ளது </p>
<p>தென் இந்திய படத்தொகுப்பாளர் சங்க தலைவர் கோபி இன்று பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் " ஜனநாயகன் வெளியே கசிந்ததில் மிகவும் வருத்தப்படுகிறோம். 5 மொழிக்கான ஒலிக்கலவைக்காக படம் ஹைதராபாத்துக்கு அனுப்பப்பட்டது .Editor மட்டுமின்றி பல தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். நம்பிக்கையின் அடிப்படையிலேயே எங்கள் பணி உள்ளது; எங்கள் தரப்பில் படம் கசிய விடப்படவில்லை, படத்தின் எடிட்டர் மீது சந்தேகம் கொள்வது வருத்தமளிக்கிறது. உண்மை தெரியும் வரை யாரையும் பழி சொல்லாதீர்கள்" என தெரிவித்துள்ளார்</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/how-to-plant-plants-in-april-month-heat-256045" width="631" height="381" scrolling="no"></iframe></p>