சொந்த காசில் சூனியம்...சாரை பாம்பை சமைத்து சாப்பிட்ட நபர் கையும் களவுமாக சிக்கியது எப்படி?

1 year ago 6
ARTICLE AD

திருப்பத்தூர் அருகே சாரை பாம்பை கொன்று தோல் உரித்து கறியாக்கி சாப்பிட்ட வாலிபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

சாரை பாம்பை சமைத்து சாப்பிட்ட வாலிபர்:

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் ராஜேஷ்குமார் (30) . இவர் நேற்று அதாவது ஜூன் 10 ஆம் தேதி சமூக வலைதளங்களில் சாரை பாம்பை தோல் உரிப்பது போல் வீடியோ ஒன்றை பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

அந்தவகையில் இந்த செயலில் ஈடுபட்ட ராஜேஸ்குமாரை கைது செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதனை ஆதாரமாகக் கொண்டு திருப்பத்தூர் கோட்ட மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் உத்தரவின் படி திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜன்  தலைமையில் வனவர் மற்றும் வனப் பணியாளர்கள்  இந்த வீடியோ வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

சிறையில் அடைத்த வனத்துறையினர்:

இந்த விசாரணையின் முடிவில் பெருமாபட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்குமார் என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.  ராஜேஸ்குமாரை கைது செய்து விசாரித்ததில் சாரை பாம்பை தோல் உரித்து அதனை சமைத்து கரியாக்கி சாப்பிட்டதும் தெரிய வந்தது. இதன் காரணமாக திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி  சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article