செம்பட்டி அடுத்த வத்தலகுண்டு சாலை, புல்வெட்டி குளம் என்ற இடத்தில் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மூன்று பேர் பலியானார்கள். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி வத்தலகுண்டு ரோடு, புல்வெட்டி குளம் என்ற இடத்தில், திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு நோக்கிச் சென்ற, தனியார் நிதி நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றும் திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்த காதர் அலி (38) இதே நிறுவனத்தில் பணியாற்றும் திண்டுக்கல் ஆர்.எம். காலனியைச் சேர்ந்த நாகராஜ் (28) ஆகியோர் வத்தலக்குண்டு நோக்கி மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

இவர்களுக்கு பின்னால் செம்பட்டி அருகே வீரசிக்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயி சடமாயன் (50) இவரது மனைவி ரதி (48) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, வத்தலகுண்டில் இருந்து காய்கறிகளை இறக்கி விட்டு, திண்டுக்கல் நோக்கி செம்பட்டி வழியாக வந்து கொண்டிருந்த, லாரி புல் வெட்டி குளம் என்ற இடத்தில் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட நாகராஜ் மற்றும் காதர் அலி சம்பவ இடத்தில் பலியானார்கள். படுகாயம் அடைந்த சடமாயன் அவரது மனைவி ரதி ஆகிய இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

BJP Congress: குட்டையை குழப்பும் காங்கிரஸ், பாஜகவிற்காக உழைக்கும் காந்தி குடும்பம், கதறும் I.N.D.I., கூட்டணி

Jaiswal-KL Rahul Record: இதான்டா ரெக்கார்ட்! 38 ஆண்டுகால வரலாற்றை உடைத்து நொறுக்கிய ராகுல் - ஜெய்ஸ்வால்!

அங்கு சிகிச்சை பலனின்றி விவசாயி சடமாயன் பலியானார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன், லாரி மோதிய விபத்தில் பலியானவர்கள் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி., கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் லாரி டிரைவர் தருமத்துப்பட்டியை சேர்ந்த நாகராஜ் என்பவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் இதே இடம் அருகில் வனத்துறை வனக்காப்பாளர் உட்பட மூன்று பேர், லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்தில் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.