சென்னை மாவட்ட மகளிர் அதிகாரம் மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் மாவட்ட மகளிர் அதிகாரம் மையம் செயல்பட்டு வருகிறது. இதில் ஒப்பந்த அடிப்படையில் சென்னை பகுதியில் பணிபுரிய இரண்டு பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன.

என்னென்ன பணியிடங்கள்?

பாலின சிறப்பு வல்லுநர் பணி (Gender specialist)

இந்த பணியிடங்களுக்கு கீழ்க்காணும் தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்ய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

காலி இடங்கள் எவ்வளவு?

2

கல்வித் தகுதி என்ன?

சமூக சேவையில் பட்டப் படிப்பு அல்லது பிற சமூகம் சார்ந்த படிப்புகள். முதுகலை பட்டப் படிப்பு முடித்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.

பணி அனுபவம்

குறைந்தது 3 ஆண்டு அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு

35 வயதுக்கு உள்ளாக இருக்க வேண்டும்.

மாத ஊதியம்

ரூ. 21,000

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்காணும் பதவிகளுக்கு உரிய சான்றிதழ்களுடன் 05-12-2025 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், எட்டாவது தளம், சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரியில் நேரடியாகவும் மற்றும் தபால் மூலமாகவும் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

கூடுதல் தகவல்களுக்கு: https://chennai.nic.in/