தமிழகத்தை உலுக்கிய கொடூர கொலை

தமிழகத்தை மட்டுமல்ல நாட்டையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது பீகார் மாநிலத்தை கணவன், மனைவி மற்றும் 2 வயது குழந்தை கொடூர கொலை சம்பவம் தான். கடந்த 26ஆம் தேதி சாக்குமூட்டையில் கிடந்த ஒரு ஆணின் சடலத்திற்கு பின்னனியில் பல பயங்கரமான சம்பங்கள் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநக போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 26ஆம் தேதி காலை, ஜே.2 அடையாறு காவல் நிலைய எல்லையிலுள்ள இந்திரா நகர், 1வது அவென்யூ, ஹோண்டா ஷோரூம் அருகில் இருந்த ஒரு சாக்கு மூட்டையிலிருந்து இரத்தம் வழிவதாக வந்த தகவலின்படி, உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சாக்கு மூட்டையினுள் இறந்த நிலையில் தலையில் வெட்டு காயங்களுடன் இருந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை கைப்பற்றி, இராயப்பேட்டை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பீகாரை சேர்ந்த 3 பேர் கொலை

இந்த சம்பவத்தையடுத்து ஜே.2 அடையாறு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தனித்தனி சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில், சாக்கு மூட்டையில் இறந்த நபர் பீகார் மாநிலம், ஷேக்பூரா மாவட்டம், பத்தியாபர் என்ற ஊரைச் சேர்ந்த கௌரவ்குமார் என்றும், அவர் வேலைத் தேடி தனது மனைவி மற்றும் 2 வயது ஆண் குழந்தையுடன் சென்னைக்கு வந்ததாகவும் தெரியவந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில், ஜனவரி 27ஆம் தேதி அன்று சத்யேந்தர் (எ) சந்தோஷ்குமார் (வயது30), என்பவரை பிடித்து விசாரணை செய்யப்படதாகவும், அதில் பீகார் மாநிலம், நாளந்தா மாவட்டம், அலிப்பூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

சத்யேந்தர் கோட்டூர்புரத்திலுள்ள Institute of Chemical Technology கல்லூரியில் பகல் நேர வாட்ச்மேனாக வேலை செய்து வருவதாகவும், தனக்குத் தெரிந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ்குமார் தன்னிடம் வேலை கேட்டதாகவும், இதனையடுத்து கடந்த24ஆம் தேதி அன்று அவருக்கு வேலை வாங்கித் தருவதாக் கூறி, பீகாரைச் சேர்ந்த கௌரவக்குமாரை அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் அழைத்து வந்து கல்லூரி வளாகத்தில் பயன்பாட்டில் உள்ள ஒரு கட்டிடத்தின் நான்காவது தளத்தில் தன்னுடன் தங்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கொலைக்கான காரணம் என்ன.?

அதே கல்லூரியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லலித் யாதவ் (40) என்பவரும் இரவுநேர வாட்ச்மேனாக வேலை செய்து வருவதாகவும், மேலும் பீகார் மாநிலம், பாட்னா மாவட்டத்தை சேர்ந்த விகாஷ் குமார் (24) என்பவர் கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மென்டில் வாட்ச்மேனாக வேலை செய்வதாகவும் தெரியவந்தது.

சம்பவத்தன்று (24.01.2026) இரவு பீகாரைச் சேர்ந்த கௌரவ்குமார், சத்யேந்தர் (எ) சந்தோஷ்குமார், லலித் யாதவ், விகாஷ் குமார் ஆகிய நால்வரும், மேற்படி கௌரவ்குமார் தங்கியிருந்த மேற்படி கட்டிடத்தின் நான்காவது தளத்தில் அமர்ந்து மது அருந்தியதாகவும், அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், சத்யேந்தர் (எ) சந்தோஷ்குமார், லலித் யாதவ், விகாஷ்குமார் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கௌரவ்குமார், அவரது மனைவி மற்றும் ஆண் குழந்தை ஆகியோரை கை மற்றும் இரும்பு ராடால் தாக்கி கொலை செய்து, அன்று இரவே சடலங்களை, சாக்கு மூட்டைகளில் கட்டி வெவ்வேறு இடங்களில் வீசிச் சென்றதாக தெரியவந்தது.

பீகாரை சேர்ந்த 3 பேர் கைது

விசாரணையில், இறந்த குழந்தையின் சடலம் மத்திய கைலாஷ் பக்கிங்காம் கால்வாயில் கிடைக்கப்பெற்றது. மேலும், இறந்த கௌரவ்குமாரின் மனைவி சடலம் தரமணி மாடர்ன் பிரட் அருகில் குப்பைத்தொட்டியில் வீசியதால், அவரது சடலத்தை பெருங்குடி குப்பைக்கிடங்கில், போலீஸார், மாநகராட்சி ஊழியர்களுடன் ஒருங்கிணைந்து தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சத்யேந்தர் (எ) சந்தோஷ்குமார் (வ/30), லலித் யாதவ் (வ/40) மற்றும் விகாஷ்குமார் (வ/24) ஆகியோரை கைது செய்து, விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே குற்றவாளிகள் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தர தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அறிக்கை்யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.