சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?

5 months ago 5
ARTICLE AD

வரும் ஜூலை 7 அமித்ஷா சென்னை வரும் நிலையில் அதே தேதியில் எடப்பாடி பழனிச்சாமி கோவை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது அதிமுக பாஜக கூட்டணிக்குள் சலசலப்பு இருக்கிறதா என்ற கேள்வியை வலுக்கச் செய்துள்ளது.

அதிமுக-பாஜக கூட்டணி:

பாஜகவுடன் கூட்டணி கிடையாது என கட் அண்ட் ரைட்டாக சொல்லி வந்த எடப்பாடியை பாஜக தலைமை எப்படியோ வழிக்கு கொண்டு வந்து கூட்டணியை உறுதிப்படுத்தியது. கடந்த மார்ச் மாதம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அடுத்த சில வாரங்களில் சென்னை வந்தார் அமித்ஷா, அதிமுக பாஜக கூட்டணி அறிவிப்பையும் வெளியிட்டார். அன்று தனது வீட்டில் அமித்ஷாவுக்கு விருந்து வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி.

தொடங்கிய பனிப்போர்:

அதன்பிறகு மதுரை வந்த அமித்ஷா கூட்டணி ஆட்சி என அமித்ஷா அறிவிக்க எடப்பாடியோ தேர்தலுக்கு மட்டும் தான் கூட்டணி கூட்டணி ஆட்சியெல்லாம் கிடையாது என கூறிவந்தார். அப்போதே தொடங்கி விட்டது அதிமுக பாஜக இடையேயான பனிப்போர். பாஜக தலைவர்களோ தொடர்ந்து கூட்டணி ஆட்சி என கூறி அதிமுகவினரை சீண்டி வந்தனர்.

அதிமுகவினர் யாரும் கூட்டணி பற்றி பேசக்கூடாது என அனைவரின் வாயை அடைத்துவிட்டார் எடப்பாடி. இதனையடுத்து பாஜகவின் தலை தூக்க தொடங்கியது. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பின் போது கூட்டணி ஆட்சி தான் என ஹிண்ட் கொடுப்பது போல் பதிலளிப்பது, மதுரை முருகன் மாநாட்டில் அண்ணாவை அவமதிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டு அதிமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.

கிளம்பிய புயல்:

இதனையடுத்து அதிமுக தரப்பில் அதற்கு விளக்கம் அளிக்கப்பட்ட போது பாஜக மௌனம் காத்தது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அமித்ஷா, கூட்டணி ஆட்சி தான் அமையும், ஆனால் அதிமுகவை சேர்ந்தவரே முதல்வர் என கூறினார். எடப்பாடியின் பெயரை கூட குறிப்பிடாமல் அமித்ஷா பேசியது அதிமுகவினர் மத்தியில் புயலை கிளப்பியது.

அமித்ஷா வருகை - தவிர்த்த எடப்பாடி?

இதனையடுத்து அதிமுக பாஜக இடையே சுமூகமான உறவு இல்லை கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுவிட்டதாக விவாதம் எழுந்தது. இந்நிலையில் மீண்டும் வரும் ஜூலை 7 அன்று அமித்ஷா சென்னை வருகிறார். அப்போதாவது ஈபிஎஸ் அமித்ஷா சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதே நாளில் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதனையடுத்து வேண்டுமென்றே அமித்ஷா சந்திப்பை ஈபிஎஸ் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. 2026 தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பங்கள் நிலவி வருவது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும், அதே நேரத்தில் அதிமுக பாஜக கூட்டணி உடைந்தால் அது அதிமுகவுக்கு இன்னொரு ப்ளஸ்ஸாக அமைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜக விலகினால் பிற கட்சிகள் அதிமுக கூட்டணியை நாட வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Read Entire Article