சென்னை ; பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா பறிமுதல் : அதிர்ச்சியில் ஆசிரியர்கள் !!

2 months ago 11
ARTICLE AD

சென்னை ; பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா பறிமுதல் : அதிர்ச்சியில் ஆசிரியர்கள் !!

சென்னை வியாசர்பாடி உள்ள எம்.கே.பி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் கஞ்சா பயன்படுத்துவதாக வந்த புகாரையடுத்து ஆசிரியர்கள் மாணவர்களை சோதனை செய்தனர்.

அப்போது பதினோராம் வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வரும் மாணவனை சோதனை செய்ததில், பேண்ட் பாக்கெட்டில் 5 கிராம் கஞ்சா பொட்டலம் மறைத்து வைத்தது தெரிய வந்தது.

இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியை ஹேமலதா, எம்.கே.பி நகர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மாணவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். பள்ளிக்கு வரும் போது சாலையில் கிடந்ததாக மாணவன் தெரிவித்துள்ளான்.

ஆனால் ஏற்கனவே கஞ்சா புகைக்கும் பழக்கம் மாணவனுக்கு இருந்துள்ளது. இதையெடுத்து ஆசிரியர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாணவனை சோதனை செய்துள்ளனர்.

சோதனையின் போது , ஐந்து கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் நடமாட்டம் பள்ளி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்து வருவதும், மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Read Entire Article