சென்னை ; காரில் கடத்தி வரப்பட்ட 265 கிலோ புகையிலை !! அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார்

1 week ago 3
ARTICLE AD

சென்னையில் காரில் கடத்தி வரப்பட்ட 265 கிலோ புகையிலை !! அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார்

சென்னை மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் கடந்த 20 - ம் தேதி , மாதவரம் சி.எம்.டி.ஏ டிரக் பார்க்கிங் அருகில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த காரை வழிமறித்து நிறுத்த செய்த போது காரை ஓரமாக நிறுத்தி விட்டு கார் ஓட்டுநர் தப்பிச் சென்றார்.

போலீசார் அந்தக் காரை சோதனை செய்த போது காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதன் பேரில் மாதவரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து 265 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், கூலிப், சுவாகத் ஆகிய குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு, இந்த குட்கா கடத்தி வந்த வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரவீன்குமார், ( வயது18 ) ஹக்கம் சிங் ( வயது 30 ) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும், விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மனைவியை சரமாரியாக தாக்கிய கணவர் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

சென்னை வியாசர்பாடி சத்திய மூர்த்தி நகர் 72 - வது பிளாக் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ் ( வயது 28 ) இவருக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. கௌசல்யா ( வயது 25 ) என்கிற மனைவியும் ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர். கௌசல்யா மீது சந்தேகப்பட்டு அடிக்கடி ராஜேஷ் தனது மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ,கணவன் மனைவிக்குள் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு ராஜேஷ் தனது மனைவி கௌசல்யாவை சரமாரியாக தாக்கினார்.

இதில் கௌசல்யாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எம்.கே.பி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ராஜேஷ் தனது மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்தது தெரிய வந்தது.இதனையடுத்து போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read Entire Article