சோகத்தை சாதனையாக மாற்றிய ஹர்ஷித் ராஜலிங்கத்தின் மனவலிமைக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tamil Nadu 12th Result 2026 ; தமிழகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில், தந்தையை இழந்த சோகத்திலும் சாதனை செய்து, பள்ளியில் 2ஆம் இடம் பிடித்த மாணவன் கவனம் பெற்றுள்ளார்.

நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மாணவன்

சிவகங்கை நகரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் ஹர்ஷித் ராஜலிங்கம், தந்தையை இழந்த சோகத்திலும் பள்ளி அளவில் 2ஆம் இடம் பிடித்து அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார். பொதுத்தேர்வு எழுதி வீடு திரும்பிய நாளிலேயே அவரது தந்தை செந்தில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த துயரத்தையும் தாண்டி தற்போது வெளியான +2 பொதுத்தேர்வு முடிவில் ஹர்ஷித் ராஜலிங்கம் 600க்கு 582 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

மென்பொருள் துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும்

“மென்பொருள் துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்பதே என் தந்தையின் ஆசை. அந்த ஆசையை நிறைவேற்ற நான் தொடர்ந்து முயற்சி செய்வேன்.” என்று மாணவன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

சோகத்தை சாதனையாக மாற்றிய ஹர்ஷித் ராஜலிங்கத்தின் மனவலிமைக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.