சிவகங்கை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு உடனே பாருங்க !

3 months ago 9
ARTICLE AD

சிவகங்கை மாவட்டம் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள் மற்றும் 18 வயது பூர்த்தியானவர்கள் பயன்பெறும் வகையில், 3.1.2026 மற்றும் 4.1.2026 ஆகிய தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது - ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல்.

சிவகங்கையில் சிறப்பு முகாம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் படி 1.1.2026 ஆம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு, 18 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் தங்களது பெயரை சேர்ப்பதற்கும், நீக்கம் செய்வதற்கும் மற்றும் திருத்தம் செய்வதற்குமான சிறப்பு முகாம்கள், சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கடந்த 27.12.2025 (சனிக்கிழமை) மற்றும் 28.12.2025 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தினங்களில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, நாளையதினம் (3.1.2026) மற்றும் 4.1.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தினங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சியர் தகவல்

மேலும், சிவகங்கை மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள தேசிய சுகாதார இயக்கத்தின் குழும இயக்குநர் டாக்டர் அ.அருண் தம்புராஜ், நாளையதினம் (3.1.2026) நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களை கண்காணிக்கப்பதற்காக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை புரிந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  நேரடியாக ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். அதனைத்தொடர்ந்து,  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுடன்  ஆய்வுக்கூட்டமும் மேற்கொள்ளவுள்ளார். மேலும், 18 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் நாளையதினம் (3.1.2026, சனிக்கிழமை) மற்றும் 4.1.2026  (ஞாயிற்றுக்கிழமை)  ஆகிய தினங்களில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில், நடைபெறும்  முகாம்களின் வாயிலாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் பதிவுகளில் திருத்தம் செய்தல் தொடர்பான படிவங்களை வாக்குச்சாவடியிலிருந்து பெற்று, பூர்த்தி செய்து அந்தந்த வாக்குச்சாவடி மையங்களிலேயே வழங்கிடலாம்.

எனவே, மேற்கண்ட தினங்களில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Read Entire Article