சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கடந்த 2012 ஆம் ஆண்டு தனது சித்தியை மண்ணெண்ணை ஊற்றி எரித்து கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை, 5 ஆயிரம் அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மாவட்டத்தில் வேலையின்மை அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள் சமூக ஆர்வலர்கள் கணிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி என நான்கு சட்ட மன்ற தொகுதிகள் உள்ளது. மாவட்டம் முழுவதும் வேலை வாய்ப்பு மிக குறைவாக இருப்பதால், பலரும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளையே வேலை வாய்ப்பிற்கு நம்பியுள்ளனர். இதனால் மாவட்டத்தில், இதன் தொடர்ச்சியாக அதிக குற்ற சம்பவங்கள் நடைபெறுவதும், ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இந்நிலையில் திருப்பத்தூர் அருகே கடந்த 2012- ஆம் ஆண்டு தனது சித்தியை மண்ணெண்ணை ஊற்றி எரித்து கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Israel Attacks Lebanon: கொத்து கொத்தாக பிணங்கள்..! 492 பேர் உயிரிழப்பு, 1600 பேர் காயம் - இஸ்ரேல் தாக்குதலால் கலங்கிய லெபனான்

ஆத்திரமடைந்த தனது சித்தியின் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளார்

திருப்பத்தூர் அருகேவுள்ள திருமுக்கானிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தபோது அதே கிராமத்தில் வசித்து வரும் தனது சித்தியிடம் பணம் கொடுக்கல் வாங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 2012 ஆம் ஆண்டு சொந்த ஊர் திரும்பிய ரமேஷ் சித்தி லெட்சுமியிடம் பணம் குறித்து பேசும்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் ஆத்திரமடைந்த ரமேஷ் தனது சித்தி லெட்சுமி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளார்.

குற்றம் உறுதி செய்யப்படவே அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ 5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவு

இதில் படுகாயமடைந்த லெட்சுமி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சென்ற நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இளைஞர் ரமேஷ் மீது திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கானது சிவகங்கை ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்தநிலையில் ரமேஷ் மீதான குற்றம் உறுதி செய்யப்படவே அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபது கோகுல் முருகன் தீர்ப்பளித்தார். சித்தியை மண்ணெண்ணை ஊற்றி எரித்துக்கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Oscar: செம்ம! மகாராஜா முதல் வாழை வரை! ஆஸ்கருக்கு அனுப்பப்படும் 6 தமிழ் படங்கள் இதுதான்!

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Anura Kumara Dissanayake: இலங்கை அதிபரானார் அனுரா குமார திசநாயகே - அதானிக்கு எதிர்ப்பு, இந்தியா உடனான உறவு எப்படி?