சிவகங்கை எல்லையில் கிராவல் மண் கொள்ளை: விவசாயம் அழிகிறது, நடவடிக்கை எங்கே?

3 months ago 7
ARTICLE AD

எல்லைப் பகுதிகளில் தொடரும் கிராவல் மண் விவகாரம்... 100 ஏக்கர் பாசனம் பாதிப்பு; நடவடிக்கை எங்கே? – விவசாயிகள் வேதனை.

விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவுக்கு உட்பட்ட தெ.புதுக்கோட்டை, கோச்சடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகள், கண்மாய் வரத்து கால்வாய்கள் மற்றும் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பல இடங்களில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கிராவல் மண் அகற்றப்பட்டுள்ளதால், தற்போது லாரிகள் செல்லும் தடங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

பாசன விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது

அய்யனார் குளம் உள்ளிட்ட கண்மாய்களுக்கு செல்ல வேண்டிய மழைநீர், ஆழமான பள்ளங்களில் தேங்கி நிற்பதால் சுமார் 100 ஏக்கர் பாசன விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல ஆண்டுகளாக நம்பிக்கையுடன் விவசாயம் செய்து வந்த குடும்பங்கள் வாழ்வாதார இழப்பை சந்தித்து வருவதாகவும் விவசாயிகள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே கிராவல் மண் அள்ளப்பட்டதால் உருவான ஆழமான பள்ளங்களில் தேங்கியுள்ள மழைநீரை வீணாகாமல் பயன்படுத்துவதற்காக, அப்பகுதி விவசாயிகள் தாங்களே சிறிய வாய்க்கால்களை அமைத்து, பெட்ரோல் மற்றும் டீசல் மோட்டார்களின் உதவியுடன் தண்ணீரை வயல்களுக்கு கொண்டு செல்கின்றனர். ஆனால், தற்போது கிராவல் ஏற்றிச் செல்லும் கனரக லாரிகள் அந்த வாய்க்கால்களின் மீதும் இயக்கப்படுவதால் அவை சேதமடைந்து, விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

அனுமதி பெற்ற சில கிராவல் குவாரிகளுக்குச் செல்லும் லாரிகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதி பெற்ற சில கிராவல் குவாரிகளுக்குச் செல்லும் லாரிகள், சிவகங்கை மாவட்ட எல்லைப் பகுதிகள் வழியாக இயக்கப்படுவதாகவும், இரவு நேரங்களில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து எடுக்கப்படும் கிராவல் மண் அனுமதி பெற்ற குவாரிகளில் கொட்டப்படுகிறதா என்ற சந்தேகத்தை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து வருவாய்த் துறை, கனிமவளத் துறை மற்றும் காவல்துறை இணைந்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொதுமக்கள் கோரிக்கை

இந்த விவகாரம் தொடர்பாக ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட நிர்வாகங்களின் கவனத்திற்கு பலமுறை கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதுவரை நிலையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்ற ஆதங்கம் அப்பகுதி மக்களிடையே நிலவுகிறது. வருவாய்த் துறையினர் கள ஆய்வை தீவிரப்படுத்தி, சட்டவிரோத மண் அகழ்வு நடைபெறுகிறதா என்பதை முழுமையாக ஆய்வு செய்து உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாய நிலங்களையும் நீராதாரங்களையும் பாதுகாக்க வேண்டும்

"கனிம வளங்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதற்காக நீர்ப்பிடிப்பு பகுதிகளும், விவசாய நிலங்களும் அழிந்து, கண்மாய்களுக்கு நீர்வரத்து தடைபட்டு, விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படக்கூடாது. தமிழக அரசு உடனடியாக தலையிட்டு எல்லைப் பகுதிகளில் சிறப்பு ஆய்வு நடத்தி, விவசாய நிலங்களையும் நீராதாரங்களையும் பாதுகாக்க வேண்டும். சேதமடைந்த வாய்க்கால்களை சீரமைத்து, விவசாயிகளின் பாசன உரிமையை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read Entire Article