சிறையில் இருந்தபடி வேட்புமனு: ஹரி நாடார் சொத்து மதிப்பு 26 கோடி! ஆலங்குளத்தில் பரபரப்பு!

1 week ago 4
ARTICLE AD

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. வரும் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் மட்டும் இன்னும் வேட்பாளர் பட்டியலை முழுமையாக வெளியிடவில்லை.

சிறையில் இருந்தபடி வேட்புமனு தாக்கல்

இத்தகைய பரபரப்பான சூழலில், சென்னை புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் இருந்து வரும் நாடார் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், தென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட சிறையில் இருந்தபடியே வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் மேல் இலந்தைகுளத்தைச் சேர்ந்த இவர் மீது இருபதிற்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள போதிலும், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் இதே ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 37,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்து மதிப்பு என்ன ?

தற்போது அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களைக் குறிப்பிட்டுள்ள விதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, தனக்கு 26 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையாச் சொத்துக்களும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், எப்போதும் உடல் முழுவதும் தங்க நகைகளை அணிந்து வலம் வரும் தனது பாணியைப் பிரதிபலிக்கும் விதமாக, தன்னிடம் 11 கிலோ தங்க நகைகளும், 17 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளும் இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் ஹரி நாடார் மற்றும் ராக்கெட் ராஜா ஆகிய இருவரும் போட்டியிடுவதால், அத்தொகுதியில் பலமுனைப் போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது. சிறையில் இருந்தபடியே ஹரி நாடார் களம் காண்பது மற்ற வேட்பாளர்களுக்கு எந்த மாதிரியான சவால்களை ஏற்படுத்தும் என்பதும், கடந்த முறையைப் போலவே இந்த முறையும் அவர் வாக்குகளைக் குவிப்பாரா என்பதும் தேர்தல் முடிவுகளின் போது தெரியவரும்.

Read Entire Article