சிறைகளில் பாதுகாப்பு இல்லை: 10,581 கைதிகள் சிகிச்சைக்காக காத்திருப்பு - உயர்நீதிமன்றம் கவலை!

3 months ago 8
ARTICLE AD

தமிழகம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு கிடைக்காமல் 10,581 கைதிகள் மருத்துவ சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர்- சிறைத்துறை தரப்பில் தகவல்   சிறைகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சிறைத்துறை டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

சிறைவாசிக்கு சிகிச்சை அளிக்க கோரிக்கை

நெல்லையைச் சேர்ந்த ரெஜினா ஸ்டெல்லா, மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "என் கணவர் ஜான். பாளையங்கோட்டை மத்திய சிறையில் 2017 முதல் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார். 8 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காமல் சிறையில் இருந்து வருகிறார். தற்போது அவரது வலது தோள்பட்டையில் வலிமிகுந்த கட்டி மற்றும் கடுமையான வயிற்று வலி உள்ளிட்ட தீவிர உடல்நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகிறார். அவரால் உணவு உட்கொள்ளவோ, தூங்கவோ அல்லது அடிப்படைச் செயல்பாடுகளை செய்யவோ முடியவில்லை. அவருக்கு சிறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததால் உடல்நல பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் என் கணவரை  நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்"  என கூறியிருந்தார்.

10,581 பேர் சிகிச்சை பெற பாதுகாப்பு வசதிக்காக காத்திருக்கின்றனர்

இந்த மனுவை நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, பூர்ணிமா அமர்வு விசாரித்தது.  சிறைத்துறை டிஜிபி தாக்கல் செய்த அறிக்கையில், "2026 ஜனவரி 1 முதல் மே 31 வரை 46 சிறைகளில் உள்ள 13,699 பேர் மருத்துவ சிகிச்சை கோரி மனு அளித்துள்ளனர். இதில் 3,118 பேர் சிகிச்சை பெற பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10,581 பேர் சிகிச்சை பெற பாதுகாப்பு வசதிக்காக காத்திருக்கின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  பின்னர், நீதிபதிகள், "கைதிகளின் மருத்துவ சிகிச்சைக்கான கோரிக்கைகள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என 3 வகைகளாக பிரிக்கப்படும். சிவப்பு வகையானது தீவிர அவசர நிலையை குறிக்கும். அதற்கு அடுத்தடுத்த நிலைகளை ஆரஞ்சு, பச்சை நிறங்கள் குறிக்கும்.

கைதியின் நிலைமையை மதிப்பிட்ட பிறகே பரிசீலிக்கப்படும்

மருத்துவ சிகிச்சை தொடர்பான பல கோரிக்கைகள் பச்சை வகையின் கீழ் வருவதால் கைதியின் நிலைமையை மதிப்பிட்ட பிறகே பரிசீலிக்கப்படும். முழுமையான சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் மொத்தம் 10,581 கைதிகள் சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். சென்னையில் மட்டும் பச்சை வகை பிரிவில் 7,812 கைதிகள் பாதுகாப்பு வசதி கிடைக்காமல் சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். இது மிகுந்த கவலையளிக்கும் விஷயமாகும். சிறைகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தினால் போலீஸ் பாதுகாப்புக்காக காத்திருக்கும் நேரம் மற்றும் கைதிகளை சிறப்பு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்வதால் ஏற்படும் செலவு ஆகியவற்றை தவிர்க்கலாம்.  கைதிகள் தாமதமின்றி சிகிச்சை பெற முடியும். எனவே, சிறைகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சிறைத்துறை டிஜிபி ஜூலை 20-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர்.

Read Entire Article