விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் ஸ்வேதா. தமிழ்ச்செல்வி கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பேரன்பை பெற்றுள்ளார். சிறகடிக்க ஆசை சீரியலை போன்று இந்த சீரியலுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. 12ஆம் வகுப்பில் தோல்வியடைந்த தமிழ்ச்செல்வி பட்டம் வாங்க போராடி கொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் பரபரப்பாகவே சின்ன மருமகள் சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

சின்ன மருமகள் நடிகை ஸ்வேதா

இந்நிலையில், நடிகை ஸ்வேதா தனது காதலருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஸ்வேதாவுக்கு 4.5 லட்சம் பாலோவர்ஸ் உள்ளார்கள். ஆனால் ஒருபோதும் தனது காதலர் புகைப்படத்தை அவர் வெளியிட்டது கிடையாது. தனியாக இருக்கும் புகைப்படத்தையே அதிகம் பகிர்ந்து வந்தார். ஆனால், கடந்த இரு தினங்களுக்கு முன்பு காதலர் ஆதியுடன் ஸ்வேதா கைகோர்த்து இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில், அவன் என் காதலன் இல்லை என ஸ்வேதா ட்விஸ்ட் வைத்திருப்பதை பார்த்து ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

காதலனுடன் கைகோர்த்த நடிகை

காதலனுடன் இருக்கும் புகைப்படம் வெளியான நிலையில், நடிகை ஸ்வேதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவன் என கணவர் கிடையாது, காதலரும் கிடையாது. அவன் மீது வழக்குகள் இருக்கிறது. போலீஸ் தேடிக்கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம். தற்போதும் ஒன்றாக இருப்பது போல பொய்யாக பேட்டி கொடுத்து என் வாழ்க்கையை கெடுக்க பார்க்கிறார். இதுதொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்துள்ளார். ஸ்வேதாவின் கணவர் எனக் கூறும் ஆதி சமீபத்தில் அளித்த பேட்டி அளித்த பின்பு தான் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.