சிங்கப்பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்... கோவிந்தா கோவிந்தா முழுக்கமிட்ட பக்தர்கள்

1 year ago 7
ARTICLE AD

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு பாடலாத்திரி நரசிங்கப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்ற முடிந்தது.

பாடலாத்திரி நரசிங்கப்பெருமாள் கோயில் ( Padalathiri Narasimma Perumal Temple )

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள சிங்கப்பெருமாள் கோயில் குடவரைக் கோயில் கோயிலாக உள்ளது. பெருமாள் திருமேனியின் மலையாக இயங்குவதால் நாம் மலையை சுற்றி வந்து சிங்கப்பெருமாளை வாங்கி செல்கிறோம். சிங்கப்பெருமாள் சங்கு சக்கரம் தாங்கி, நான்கு கரங்களுடன் வலது காலை மடக்கி அமர்ந்த காலத்தில், மிகவும் அரிதான நெற்றிக்கண்ணுடன் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்.

சிங்கபெருமாள்கோவில், முதலில் அஷ்வார் நரசிம்மத்வார் மற்றும் நரசிங்க வின்னகர் அஸ்வர் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. பல்லவர்களின் குடைவரை கட்டிடக்கலையில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. சோழர்கள் காலத்திலும் இந்த கோயிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று உள்ளது. தொடர்ந்து பல்வேறு காலகட்டத்தில் திருப்பணிகள் நடைபெற்றதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளது.

ஆண்டாள், லட்சுமி நரசிம்மர், ஆழ்வார்கள், ராமானுஜர் ஆகியோர்களுக்கு இங்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. கிரிவலம் வரும் பக்தர்கள் அரிய வகையான அழிஞ்சல் மரத்தை பார்க்க முடியும். இம்மரத்தை வணங்கி வருபவர்களுக்கு திருமணம் வரும் மற்றும் குழந்தை வரும் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

சிறப்பம்சங்கள் என்ன ?

மார்கழி மற்றும் தை மாதங்களில் நரசிம்மர் பாதங்களிலும் ரத சப்தமிக் தினத்தன்று நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளி படர்கிறது. கடன் தொல்லை, வழக்குகளில் இருந்து விடுபடுவது, செவ்வாய் தோஷத்தில் ஏற்படும் திருமணம் தடை நீங்கவும், நரசிம்மர் அருள் புரிந்து வருகிறார். திருவாதிரை ,சுவாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இந்தக் கோயில் பரிகாரத்தலமாக விளங்குகிறது.

தல பெருமை கூறுவது என்ன  ?

பாடலம் என்றால் சிகப்பு, அத்ரி என்றால் மலை. நரசிம்ம பெருமாள் கோபக்கனலாக சிவந்த கண்களுடன் இம்மலையில் தரிசனம் தந்ததால், பாடலாத்ரி என்ன இவ் ஊருக்கு பெயர் ஏற்பட்டது.

தோசை பிரபலம்

திருப்பதி என்றால் லட்டு, ஸ்ரீரங்கம் என்றால் புளியோதரை, இதுபோன்று ஒவ்வொரு கோயிலுக்கும் விசேஷ பிரசாதங்கள் உள்ளன. அந்த வகையில் சிங்கப்பெருமாள் கோயிலுக்கு சுவையான மிளகு தோசை தான் பிரபலமாக உள்ளது. இங்கு கொடுக்கப்படும் மிளகு தோசை மிக விசேஷ பிரசாதமாக பார்க்கப்படுகிறது.

தல வரலாறு கூறுவது என்ன ?

ஜாபாலி மகரிஷி நரசிம்மரின் தரிசனம் வேண்டும் என்பதற்காக இந்த தலத்தில் கடும் தவம் இருந்தார். மகரிஷியின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள் பிரதோஷ வேளையில் மகரிஷிக்கு தரிசனம் தந்தார். இதன் அடிப்படையில் இந்த தளத்தில் பெருமாளுக்கு பிரதோஷத்தன்று திருமஞ்சனம் நடைபெறுகிறது.

மகா கும்பாபிஷேகம் பெருவிழா

சிறப்பு வாய்ந்த சிங்கப்பெருமாள் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக அறநிலையத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. இத்திருப்பணியில் ஸ்ரீமூலவர் விமானம், ஸ்ரீதாயார் விமானம், ஸ்ரீஆண்டாள் விமானம், இராஜகோபுரம், துவஜாரோகணம் மண்டபம், ஸ்ரீ சீனிவாசர் மண்டபம். கொடிமரம், ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சன்னதி (உள்ளே மற்றும் வெளியே) மதில் சுவர் மராமத்து பணிகள் போன்றவை முடிந்து அழகிய வர்ணம் பூசப்பட்டது.

இதனைத்தொடர்ந்து யாகம் வளர்க்கப்பட்டு கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. இந்தநிலையில் இன்று கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு கலசங்களுக்கு சிறப்பு யாகம் வழங்கப்பட்டு கலச புறப்பாடு செய்யப்பட்டு, கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்ற போது கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் முழக்கமிட்டனர்.

Read Entire Article