சிக்கிய ₹24 லட்சம் பணம்... கோவையில் பறக்கும் படை அதிரடி…

2 months ago 12
ARTICLE AD

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, துணை வட்டார வளர்ச்சி அலுவலரும் பறக்கும் படை அதிகாரியுமான சுவாமிநாதன் தலைமையில் இன்று மதியம் சுமார் 12 மணியளவில் கொடிசியா பகுதியில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கோவையில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்

அப்போது, பீடம்பள்ளியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் விஷ்ணுபிரசாத் பயணித்த கார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. சோதனையின் போது, அவர் கொண்டு சென்றிருந்த ரூ.24 லட்சம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து, தேர்தல் விதிமுறைகளின்படி அந்த பணத்தை அதிகாரிகள் உடனடியாக பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம், கோவை தெற்கு துணை தாசில்தார் கருணாநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைக்காக அந்த தொகை வருமான வரித்துறை துணை இயக்குநரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விஷ்ணுபிரசாதிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் காலத்தில் கணக்கில் வராத பணப்பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இத்தகைய சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article