சாதிய அருவருப்பின் அட்டூழியம்.. நெல்லை ஆணவக்கொலை சம்பவம்.. மாரி செல்வராஜ் ஆதங்கம்

4 months ago 5
ARTICLE AD
<p>தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரசேகரின் மகன் கவின். இவர் சென்னையில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கவின் தனது பள்ளித் தாேழியை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தனர். இவர்களது காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள். கவின் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் தம்பி சுர்ஜித்திற்கு பிடிக்கவில்லை.&nbsp;</p> <p>ஆரம்பத்தில் இருந்தே கவினை சுர்ஜித் எச்சரித்து வந்துள்ளார். சுர்ஜித்தின் சகோதரி நெல்லை பாளையங்கோட்டையில் சித்த மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். விடுமுறை நாளில் சொந்த ஊருக்கு வந்திருந்த கவின் தனது காதலியை பார்ப்பதற்காக பாளையங்கோட்டை சென்றுள்ளார். அப்போது சுர்ஜித் தனது அக்காவை பார்க்க வரக்கூடாது எனக் கூறி வாக்குவாதம் செய்திருக்கிறார். இந்தச் சூழலில் சுர்ஜித் கவினை கொடூரமான முறையில் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆணவக்கொலை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், கவினின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp;</p> <p>கவினின் உடலை வாங்க மறுத்து சுர்ஜித்தின் பெற்றோர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், தமிழக அரசு அறிவித்த நிவாரணத்தை வாங்க மறுத்துள்ளனர். எங்களுக்கு நிதி தேவை இல்லை. நீதி தான் வேண்டும் எனவும் போலீசாரிடம் வலியுறுத்தினர். இந்த கொடூர சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் இதனை கண்டித்து கருத்து தெரிவித்துள்ளார்.</p> <p>அவர் தனது சமூகவலைதளத்தில், "நீளும் சாதிய அறுவறுப்பின் அட்டூழியம், சாதிய பெருமைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும், கடுமையாகவும் செயல்படுத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p>
Read Entire Article