சமுதாயம் இல்ல.. இல்ல என சொல்லுவது சும்மா ! பொன்முடி எதிரே போட்டுடைத்த அன்னியூர் சிவா

7 months ago 9
ARTICLE AD

விழுப்புரம்: இனிமேல் முன்னாள் அமைச்சர் பொன்முடி அரசியலில் உடனிருப்பவர்கள் சொல்வதை அதிகம் நம்புவார். இனிமேல் அதனை நம்ம மாட்டார் என நினைப்பதாகவும், சமுதாயம் இல்ல இல்ல என சொல்லுவது சும்மா நம்ம சமுதாயத்திலையே வளர கூடாதென நினைப்பவர்கள் இருப்பதாக பகிரங்கமாக திமுக செயற்குழு கூட்டத்தில் விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூர் சிவா தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கெளதமசிகாமணி தலைமையில் செய்ற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூர் சிவா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ அன்னியூர் சிவா., அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருக்கும் பொன்முடி முன்னிலையில் இனிமேல் முன்னாள் அமைச்சர் பொன்முடி  அரசியலில் உடனிருப்பவர்கள் சொல்வதை அதிகம் நம்புவார் இனிமேல் அதனை நம்ம மாட்டார் என நினைக்ககின்றேன், சமுதாயம் இல்ல.. இல்ல என சொல்லுவது சும்மா நம்ம சமுதாயத்திலையே வளர கூடாதென நினைப்பவர்கள் இருப்பதாக பகிரங்கமாக தெரிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் பதவி தனக்கு முன்னாள் அமைச்சர் பொன்முடியால் தான் கிடைத்தது என்றும் பல ஆண்டுகளாக திமுகவில் இருந்து வரும் தன்னை பற்றி தவறாகவே கட்சி நிர்வாகிகள் பொன்முடியிடம் தெரிவித்துள்ளனர். ஆனாலும் 1993 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் திமுக மிகப்பெரிய சரிவை சந்தித்தபோதும் அவருடன் உடனிருந்தவன் தான் என கூறினார். தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டியில் யார் நின்றாலும் தேர்தலில் வாக்கு தான் சேகரிப்பேன், முன்னாள் அமைச்சர் பொன்முடி எந்த இடத்திற்கு போனாலும் வாழ்க என கூற தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றதிலிருந்து பொன்முடியின் உறுதுனையோடு விக்கிரவாண்டிக்கு திட்டங்களை கொண்டு வருவதாகவும் விக்கிரவாண்டி தொகுதியில் யார் வேண்டுமானாலும் நிற்கலாம் தலைமை முடிவு செய்யும், திமுகவில் இருந்த விசுவாசத்திற்காக விக்கிரவாண்டி வேட்பாளராக ஸ்டாலின் தன்னை அறிவித்ததாக அன்னியூர் சிவா தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து பேசிய முன்னள் அமைச்சர் பொன்முடி....

வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று நிரந்தர முதல்வராக ஸ்டாலின் வரவேண்டும் அதற்காக வீடுவீடாக சென்று பிரச்சாரம் செய்ய வேண்டுமென, யார் யாருடன் கூட்டணிக்கு போனாலும் திமுக ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி தான் 2026 தேர்தலில் வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார். திமுக கூட்டணி 2026 மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் முதல்வர் ஸ்டாலினின் நான்கு ஆண்டு சாதனைகளை மக்கள் மறக்க தயாராக இல்லை என பொன்முடி தெரிவித்துள்ளார்.

Read Entire Article