சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் 2024 ஆம் ஆண்டு ஐந்தரை லட்சம் பக்தர்கள் அதிகமாக தரிசனம் செய்துள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள பிரிசித்திபெற்ற கோவிலான சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சீசன் நேரங்களில் மட்டுமல்லாமல் பெரும்பாலும் ஒவ்வொரு மாதமும் ஐயப்ப பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தற்போது ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை, மகரவிளக்கு சீசன் தொடங்கியதையொட்டி பல்வேறு மாநிலத்திலிருந்து லட்சக்கணக்கிலான பக்தர்கள் வருகை புரிகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டும் அதிகரித்து உள்ளது.

Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?

சபரிமலையில் வரும் 14-ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அன்று மாலை, ஐயப்ப சுவாமிக்கு பொன் ஆபரணம் சாத்தப்பட்டு தீபாராதனை காட்டப்படுவது வழக்கம். அப்போது பொன்னம்பலமேட்டில் ஜோதி ஒளிரும். ஐயப்ப சுவாமியே ஜோதி சொரூபமாகக் காட்சியளிப்பதாக மகரஜோதியை தரிசித்து பக்தர்கள் பரவசமடைகின்றனர்.

இதனிடையே, மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பதைக் கருத்திற்கொண்டு, ஆன்லைன் முன்பதிவு மற்றும் ஸ்பாட் புக்கிங் முறைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, காவல்துறையின் அறிவுறுத்தலின்பேரில் இன்றிலிருந்து ஸ்பாட் புக்கிங் முறையில் நாளொன்றுக்கு 5,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு

ஆன்லைன் முன்பதிவு முறையில், ஜன. 12 - 60,000 பக்தர்களும், ஜன. 13 - 50,000 பக்தர்களும், ஜன. 14 -மகரவிளக்கு நாளில் 40,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவர். அதனைத் தொடர்ந்து, ஜன. 15, 16 ஆகிய நாள்களில் மேற்கண்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இந்த நிலையில், மகரவிளைக்கையொட்டி பந்தள அரண்மனையிலிருந்து தங்க ஆபரணங்கள் அடங்கிய திருவாபரணப்பெட்டி ஊர்வலம், பந்தளத்திலிருந்து வரும் 12-ஆம் தேதி பகல் 1 மணியளவில் புறப்படுகிறது. ஜன. 14-ஆம் தேதி அதிகாலை திருவாபரணப்பெட்டி நிலக்கல் கோயிலைச் சென்றடைகிறது. அதனைத்தொடர்ந்து, அன்று மாலை சபரிமலை சன்னிதானத்தைச் சென்றடைகிறது.