<p>ப்ளாஸ்ட் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் அர்ஜூன் சனாதன தர்மத்திற்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளால் தொடர்ச்சியாக சனாதன எதிர்ப்பு என்பது பேசப்பட்டு வரும் நிலையில் அர்ஜூனின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது </p>
<p>சனாதன் என்பது ஒரு வாழ்க்கை முறை. வாழ்க்கையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது சனாதனத்தில் இருக்கிறது. திருடாதீர்கள் ,இன்னொரு பொருளுக்கு ஆசைப்படாதீர்கள் , வயதான நம் பெற்றோர்களை பார்த்துக்கொள்ள சொல்லி சனாதனம் தர்மம் சொல்கிறது. சனாதனம் இருக்கக் கூடாது என்றால் நம் பெற்றோர்களை வீட்டில் இருந்து துரத்திவிட வேண்டும். அது சாத்தியமா. சனாதனம் என்பது ஒரு மதம் இல்லை அது ஒரு வாழ்க்கை முறை. சனாதன தர்மத்தை நான் அப்படிதான் புரிந்துகொண்டிருக்கிறேன். எல்லாரும் அதை புரிந்துகொண்டால் நன்றாக இருக்கும் " என அர்ஜூன் கூறினார் . அர்ஜூனின் இந்த கருத்து தொடர்ச்சியாக சனாதன எதிர்ப்பை பேசி வரும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலளிக்கவே பேசியுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.</p>
<p> </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/using-dirty-pillows-can-cause-acne-261784" width="631" height="381" scrolling="no"></iframe></p>