விஜயின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த செயலை கண்டித்து ஒட்டுமொத்த திரையுலகத்தினரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் இயக்குநர் அமீர் மட்டும் படத்தை விமர்சனம் செய்திருந்தார். இணையத்தில் சட்ட விரோதமான படத்தை பார்த்தது மட்டுமில்லாமல் அதற்கு விமர்சனம் வேறு சொல்கிறீர்களா என ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

ஜனநாயகன் திரைப்படத்தை கடந்த மார்ச் 17 ஆம் தேதி மறுதணிக்கை குழுவினர் பார்வையிட்டு படம் தணிக்கை சான்றிதழுக்காக காத்திருந்தது. இப்படியான யாரோ சிலர் இந்த படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படக்குழுவினர் எவ்வளவு முயற்சி செய்தும் படம் பகிரப்படுவதை தடுக்க இயலவில்லை. ரஜினிகாந்த் , கமல்ஹாசன் என இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் இந்த செயலை கண்டித்து வருகிறார். படத்தை வெளியிட்டவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என அனைவரும் கூறி வருகிறார்கள்.

அமீர் விமர்சனம்

இணையத்தில் வெளியான ஜனநாயகன் படத்தை தரவிரக்குபவர்கள் மற்றும் பகிர்பவர்கள் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழு வக்கீல் நோட்டீஸ் வெளியிட்டிருந்தது. ஆனால் படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சியை குறித்து இயக்குநர் அமீர் தனது விமர்சனத்தை தெரிவித்திருந்தார். ஜனநாயகன் படத்தில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக காட்டப்பட்டிருந்ததை சுட்டிகாட்டி இதுதான் உங்கள் அரசியலா என அவர் தெவக தலவைர் விஜயை விமர்சித்திருந்தார். அமீரின் விமர்சனம் நியாயமானது என்றாலும் கசிந்த பட காட்சிகளை சட்டவிரோதமாக பார்த்தது அவருக்கு எதிராக விமர்சனங்களை தூண்டியுள்ளது

திருட்டுத்தனமாக படத்தை பார்த்ததே தப்பு இதுல விமர்சனம் வேறயா என விஜய் ரசிகர்கள் பலர் அமீரை விமர்சித்து வருகிறார்கள். மேலும் படக்குழு தரப்பில் இருந்து இயக்குநர் அமீர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா என ரசிகர்கள் கேள்வியும் எழுப்பியுள்ளார்கள். முன்னதாக விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை பல இடங்களில் அமீர் தனது விமர்சனத்தை தெரிவித்திருந்தார். இதனால் தவெக ஆதரவாளர் அவர்மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார்கள். தற்போது தானே வம்படியாக வந்தாக தலையைக் கொடுத்துள்ளார் அமீர்.