மீண்டும் திரையரங்கில் சச்சின்

நடிகர் விஜய் அரசியல் பணிகளில் முழு வீச்சாக களமிறங்கும் நேரம் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதே போல தனது கடைசி படத்துடன் சினிமாவை விட்டு முழுவதுமாக விலகும் தருணமும் ரசிகர்களுக்கு மிக கஷ்டமான தருனமாக இருக்கும். விஜயின் கடைசி படத்திற்கு ஜன நாயகன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. எச்.வினோத் இயக்கி வருகிறார். கே.வி என் ப்ரோடக்‌ஷன் தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே , பாபி தியோல் , மமிதா பைஜூ , பிரகாஷ் ராஜ் , கெளதம் மேனன் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். ஜனநாயகன்

இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்படவில்லை. இதனிடையில் விஜய் நடித்த சச்சின் திரைப்படம் மீண்டும் திரையரங்கில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் கோடை விருந்தாக ரிலீசாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சற்று முன் அறிவித்துள்ளார். விஜய் நடிப்பில் முழுக்க முழுக்க கல்லூரி காதலை மையமாக வைத்து வெளியான படம் சச்சின். மிகவும் துள்ளலான நகைச்சுவை கலந்த காதல் படமாக இந்த படம் உருவாகியிருக்கும்

சச்சின் படத்தில் நடிக்க இருந்த கன்னட சூப்பர்ஸ்டார்

சச்சின் படம் கடந்த 2005ம் ஆண்டு ரிலீசான படம். இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் வெளியானதை கொண்டாடும் விதமாக தற்போது ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. சச்சின் படத்தை பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கியிருப்பார். இந்த படத்திற்கு ஜீவா ஒளிப்பதிவு செய்திருப்பார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருப்பார். விடி விஜயன் ஒளிப்பதிவு செய்திருப்பார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருப்பார். அவருடன் வடிவேலுவும் கல்லூரி மாணவராக நடித்திருப்பார். படத்தில் விஜய் - ஜெனிலியா காட்சிகளுக்கு இணையாக, வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களின் மனம் கவர்ந்தவை.

#SACHEIN Re-Release Poster🔥

Stars : Thalapathy Vijay - Genelia
Music : Devi Sri Prasad (Thandel)
Direction : John Mahendran (Aanivaer)

Planning For April 14 Re-Release!! pic.twitter.com/VmGCK8N3ZO

— Saloon Kada Shanmugam (@saloon_kada) February 11, 2025

சச்சின் படத்தில் முன்னதாக மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் புனீத் ராஜ்குமார் நடிக்கவிருந்ததாகவும் அவரது கால்ஷீட் கிடைக்காததால் விஜய் இந்த படத்தில் நடித்து படத்தை வேற லெவலுக்கு ஹிட் கொடுத்ததாக படத்தின் தயாரிப்பாலர் கலைப்புலி எஸ் தானு தெரிவித்துள்ளார்.