சங்கீதா பிறந்தநாளுக்கு ரசிகர் கொடுத்த பரிசு...ரெண்டு செகண்ட் விஜய் கண்ணில் வந்த எமோஷன்

5 hours ago 1
ARTICLE AD

நடிகர் விஜய் இன்று திருப்பூரில் பிரச்சாரத்திற்காக சென்றுள்ளார். மற்ற மாவட்டங்களைப் போல் திருப்பூரிலும் விஜயை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியுள்ளார்கள். பிரச்சாரத்தின் போது ரசிகர் ஒருவர் விஜய் மற்றும் சங்கீதாவின் புகைப்படம் ஒன்றை விஜய்க்கு பரிசாக கொடுத்தார். விஜய் அந்த புகைப்படத்தை வாங்கி சில நொடிகள் எமோஷனலாக அந்த புகைப்படத்தை பார்த்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தவெக தலைவர் விஜய் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஊர்வலாக சென்று மக்களை சந்தித்து பேசி வருகிறார். திருநெல்வேலி , தூத்துக்குடி , காரைக்குடி , கன்யாகுமரி ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து இன்று கொங்கு மண்டலத்தில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கோயம்புத்தூர் விமானத்தில் இருந்து தொடங்கி சாலை வழியாக திருப்பூர் செல்லவிருக்கிறார். விஜயை காண ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரச்சாரத்தின் போது விஜயை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வருகிறார். கூலிங் கிளாஸ் , கூல் ட்ரிங்ஸ் , பூச்செண்டு என பல்வேறு பொருட்களை கொடுத்து ரசிகர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள் அந்த வகையில் ரசிகர் ஒருவர் இன்று விஜயின் மனைவி சங்கீதாவின் பிறந்தநாளில்  விஜய் சங்கீதாவின் புகைப்படம் ஒன்றை பரிசாக வழங்கினார்

சங்கீதா புகைப்படத்தை பார்த்து எமோஷனலான விஜய்

விஜய் மற்றும் சங்கீதா இருபக்கம் நிற்க அவர்களுக்கு நடுவில் நடிகர் விஜயகாந்த் நிற்கும் பிரேம் போட்ட புகைப்படம் ஒன்றை ரசிகர் விஜய்க்காக கொண்டு சென்றார். பிரச்சாரத்தின் போது அதை பார்த்த விஜய் அந்த ரசிகரிடம் இருந்து அந்த புகைப்படத்தைப் பெற்றுக்கொண்டு அதனை சில நொடிகள் பார்த்தபடி இருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் மற்றும் சங்கீதாவுக்கு 1999 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா ஷாஷா என இரு குழந்தைகள் உள்ளனர். 27 ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பின் விஜயிடம் இருந்து சங்கீதா விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். விஜய்க்கு மற்றொரு பிரபல நடிகையோடு தொடர்பிருப்பதாக சங்கீதா தனது மனுவில் தெரிவித்துள்ளார். இன்று சங்கீதாவின் பிறந்தநாளில் விஜய்க்கு மனதிற்கு நெருக்கமான பரிசை ரசிகர் வழங்கியுள்ளார்.

#ThalapathyVijay spots a photo frame of him with his wife #Sangeetha and #Vijaykanth. Out of the entire crowd, he makes sure to receive it and looks at it emotionally 🥹 for a few seconds, then returns back normal and passes it to his security. pic.twitter.com/P60I23rr64
— Movies Singapore (@MoviesSingapore) April 14, 2026

Read Entire Article