ஒசூர், கோவை, மதுரை, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என்று டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் விஜய் டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து தமிழ்நாட்டின் நலன்கள் சார்ந்து பல கோரிக்கைகளை முன்வைத்தார். இதனைத்தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.

செய்திக்குறிப்பில் வெளியிட்டிருப்பதாவது, 'நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று (27.05.2026) புதுதில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, விரைவான வளர்ச்சியைப் பெற்றுவரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது என்றும், இத்தகைய வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது இன்றியமையாதது என்பதால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், இரயில்வே திட்டங்கள், தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டின் வலுவான கல்விச் சூழலை மேலும் வலுப்படுத்த, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை (Institutes of National Importance) தமிழ்நாட்டில் நிறுவிடவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றி வரும் ஓசூர். கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் பொதுப் போக்குவரத்தினை மேம்படுத்திடத் தேவையான மெட்ரோ இரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடுமாறும் நிதியமைச்சரை தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.