கோலி முதல் புஜாரா வரை! 8 மாதத்தில் 18 வீரர்கள் ஓய்வு...கிரிக்கெட் உலகில் அதிர்ச்சி!

3 months ago 4
ARTICLE AD

உலக கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் இது வரை மட்டும் 18 முக்கிய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

புஜாரா ஓய்வு:

அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா நேற்று(24.08.25) அறிவித்தார். தனது கிரிக்கெட் பயணத்தில் 103 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடினார். ஐபிஎல்லில், அவர் கேகேஆர், ஆர்சிபி, சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸ் அணிக்களுக்காகன் விளையாடினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாரா தனது முத்திரையைப் பதித்தவரான புஜாரா,  டிராவிட்டைப் போலவே களத்தில் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடக்கூடியவர், இதனால் தலைச்சிறந்த பந்து வீச்சாளர்களால் கூட அவரை விரைவாக வெளியேற்ற முடியாததால் அவர் சுவர் என்று அழைக்கப்பட்டார். இந்த ஆண்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்த 18வது கிரிக்கெட் வீரர் புஜாரா ஆவார். முன்னதாக, ரோஹித் சர்மா, விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றனர், மேலும் பல கிரிக்கெட் வீரர்கள் மூன்று வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெற்றனர்.

முக்கிய வீரர்கள் ஓய்வு:

2025 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் கிரிக்கெட் வீரர்களில் நிக்கோலஸ் பூரன் மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகியோரின் பெயர்களும் அடங்கும். இவர்கள் இளம் வயதிலேயே தங்கள் ஓய்வை அறிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கியது. மேற்கிந்திய தீவுகளின் அதிரடி பேட்ஸ்மேன் பூரனுக்கு வெறும் 29 வயதுதான், அதே நேரத்தில் தென்னாப்பிரிக்காவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசென் 33 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார்.

மூன்று வடிவ கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற வீரர்கள்

பூரன் மற்றும் கிளாசனை தவிர, இந்த ஆண்டு இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விருத்திமான் சஹா, வருண் ஆரோன், பியூஷ் சாவ்லா, நியூசிலாந்து தொடக்க வீரர் மார்ட்டின் குப்தில், வங்கதேசத்தின் தமீம் இக்பால், ஆப்கானிஸ்தானின் ஷபூர் ஜத்ரான், இலங்கையின் திமுத் கருணாரத்னே மற்றும் மேற்கிந்திய தீவுகளின் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றனர்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ஓய்வு பெற்றனர்.

மே 7 அன்று ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார், 5 நாட்களுக்குப் பிறகு மே 12 அன்று, விராட் கோலியும்  ஓய்வு பெற்றார். இருவரும் இந்தியாவுக்காக பல மறக்கமுடியாத இன்னிங்ஸ்களை விளையாடினார்கள், இருவரும் டெஸ்ட் அணியின் கேப்டன்களாகவும் இருந்தனர். இந்த ஆண்டு இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள்

ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மார்ச் 5, 2025 அன்று ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் இந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர். இவர்களைத் தவிர, பங்களாதேஷின் முஷ்பிகுர் ரஹீமும் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2025 ஆம் ஆண்டு தொடங்கி 8 மாதங்கள் மட்டுமே கடந்துவிட்டன நிலையில் பல புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் தங்களது ஓய்வை அறிவித்துள்ளது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

Read Entire Article