கோடை சீசன் உச்சம்: தஞ்சை பெரிய கோயில் சுற்றுலாப்பயணிகளால் களைகட்டியது

1 month ago 7
ARTICLE AD

தஞ்சாவூர்: கோடை விடுமுறை என்பதால் தஞ்சாவூர் பெரிய கோயில் சுற்றுலாப்பயணிகள் வருகையால் ஸ்தம்பித்தே போய்விட்டது. நாளை 27ம் தேதி பெரிய கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் முதன்மையான சுற்றுலா தலங்களில் தஞ்சாவூரும் ஒன்றாக மாறியுள்ளது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து கொண்டே வருகிறது. தஞ்சாவூருக்கு கடந்த 2018ம் ஆண்டில் 1.62 கோடியையும், 2019 ஆம் ஆண்டில் 1.97 கோடியை எட்டிய சுற்றுலா பயணிகளின் வருகை, 2020ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக சில ஆண்டுகளுக்கு குறைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும் 2024ம் ஆண்டில் 1.37 கோடியாக அதிகரித்த சுற்றுலா பயணிகளின் வருகை 2025ம் ஆண்டில் கிட்டத்தட்ட 1.80 கோடியாக உயர்ந்துள்ளது. இதில், உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை 2024ம் ஆண்டில் 1.34 கோடியாக இருந்த நிலையில், 2025-ல் 1.77 கோடியைக் கடந்துவிட்டது. இதில், அதிகபட்சமாக 2025 பிப்ரவரியில் 20.36 லட்சம் பேரும், மே மாதத்தில் 16.91 லட்சம் பேரும், டிசம்பரில் 16.74 லட்சம் பேரும், மார்ச் மாதத்தில் 16.40 லட்சம் பேரும் அதிக அளவில் வந்து சென்றனர்.

முக்கியமாக தஞ்சாவூர் பெரிய கோயில், அரண்மனை, சிவகங்கை பூங்கா, மாரியம்மன் கோயில், சுவாமி மலை கோயில், கும்பகோணம் பகுதி கோயில்கள் என்று பள்ளி காலாண்டு, அரையாண்டு, கோடை விடுமுறை காலத்தில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் மிக அதிகமாக இருக்கிறது. தவிர, சனி, ஞாயிறு உள்பட தொடர் விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகின்றனர். முக்கியமாக தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வரும் வெளி மாவட்டம், வெளி மாநில சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

தமிழக அளவில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் தஞ்சாவூருக்கு வருகின்றனர். தேசிய அளவில் ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானா, கேரளம் ஆகிய மாநிலங்களிலிருந்து பெருமளவில் வந்து செல்கின்றனர். தவிர, வட மாநிலங்களிலிருந்து கணிசமான அளவுக்கு வந்து செல்கின்றனர். நவக்கிரகங்கள் மற்றும் பரிகார தலங்களுக்கு செல்லும்போது பெரிய கோயில், அரண்மனைக்கு வருகின்றனர்.

கேரள மக்கள் வேளாங்கண்ணிக்கு செல்லும் வழியில் பெரிய கோயிலை தவிர்ப்பதில்லை. இதேபோல, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்னை, புதுச்சேரிக்கு சென்றுவிட்டு, அடுத்து தஞ்சாவூருக்கு வருகின்றனர். குறிப்பாக, வெயில் அளவு குறைவாக நிலவக்கூடிய ஜனவரி, பிப்ரவரி, மார்ச், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் அதிகமாக வந்து செல்கின்றனர். தஞ்சாவூரில் பெரிய கோயில், அரண்மனையை பார்த்து ரசிக்கின்றனர்.

அரண்மனையிலும் குறிப்பாக கலைக்கூடத்துக்கு சென்று உலோக சிற்பங்களைப் பார்க்கவே விரும்புகின்றனர். அந்த வகையில் தற்போது கோடை விடுமுறை என்பதால் பெரிய கோயிலும் நேற்றும், இன்றும் அதிகளவில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை புரிந்தனர். இதனால் பெரிய கோயில் சுற்றுப்பகுதியில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. பெரிய கோயில் பார்க்கிங் பகுதி, பழைய கோர்ட் ரோடு, சிவகங்கை பூங்கா பகுதி என அனைத்து பகுதியிலும் சுற்றுலாப்பயணிகள் வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத:து நெரிசல் ஏற்பட்டது.

காலை முதல் சுற்றுலாப்பயணிகள் ஆயிரக்கணக்கில் வந்தனர். மதியம் வெயில் அதிகம் இருந்ததால் பக்தர்கள் வருகை குறைந்தது. பின்னர் மாலை நேரத்தில் மீண்டும் அதிகரித்தது. கோடை விடுமுறை என்பதால் குடும்பம் குடும்பமாக வந்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

Read Entire Article