கொப்பரை உற்பத்தி குறைந்தது... தேங்காய் எண்ணெய் விலை உயர்வால் நடுத்தர மக்கள் வேதனை

5 months ago 4
ARTICLE AD

தஞ்சாவூர்: கொப்பரை உற்பத்தி குறைந்து விட்டதால் தஞ்சாவூரில் தேங்காய் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் விலை தற்போது ரூ.400-க்கு விற்பனையாகிறது. இந்த விலை நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தேங்காய் அதிகமாக விளையும் மாவட்டங்களில் தஞ்சையும் ஒன்று. இங்கு பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தேங்காய்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். இதேபோல் திருவையாறு பகுதிகளிலும் தென்னை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தேங்காய் எண்ணெய் தயாரிக்க, முதலில் தேங்காய்யை உரித்து அதனை வெயிலில் உலர்த்தி கொப்பரை தேங்காய் எடுக்கப்படுகிறது. பின்னர் கொப்பரையில் இருந்து தேங்காய் எண்ணெய், தேங்காய் பால், தேங்காய் பவுடர் உள்ளிட்ட பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே வறட்சி மற்றும் வெள்ளை ஈ நோய் தாக்குதலால் விளைச்சல் குறைந்து தேங்காய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தஞ்சையில் ஒரு கிலோ தேங்காய் ரூ.65க்கும், தரம் வாரியாக ஒரு தேங்காய் ரூ.25 முதல் ரூ.50 வரையிலும் விற்கப்படுகிறது. இதனால் கிலோ ரூ.140க்கு விற்பனை செய்யப்பட்ட கொப்பரை தேங்காய் தற்போது விலை உயர்ந்து கிலோ ரூ.220-க்கு விற்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் லிட்டர் ரூ.400க்கும் விற்கப்படுகிறது.

அன்றாடம் சமையல் உள்ளிட்ட அத்தியாவசிய பயன்பாடுகளில் முக்கிய பங்கு வகிப்பது தேங்காய் எண்ணெய். இந்த நிலையில் கொப்பரையின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, விற்பனையும் வெகுவாக சரிந்துள்ளது. இதனிடையே கடந்த ஏப்ரல் மாதத்தில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாமாயில், சூரிய காந்தி எண்ணெய்களின் சுங்கவரியை குறைத்ததால், அதன் விலை கணிசமாக குறைந்து வருகிறது. அந்த வகையில் பாமாயில் லிட்டர் ரூ.145க்கும், சூரியகாந்தி எண்ணெய் லிட்டர் ரூ.135க்கும் விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதனை வாங்கிச்  செல்கின்றனர். தேங்காய் எண்ணெய் உபயோகத்தை மக்கள் அதிகம் விரும்பினர். ஆனால் தற்போது கொப்பரை தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளதால் விலை அதிகம் உயர்ந்துள்ளது. இது நடுத்தர மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உணவு தயாரிப்பில் தேங்காய் எண்ணெய் மிக முக்கியமான இடத்தை பிடித்து வந்த நிலையில் இப்போது தேங்காய் எண்ணெய் வாங்குவது மக்கள் மத்தியில் குறைந்துள்ளது.

இது குறித்து தஞ்சையை சேர்ந்த எண்ணெய் மொத்த வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது: தஞ்சையில் சமையலுக்கும் பயன்படுத்தப்படும் எண்ணெய்களின் விலை குறைந்து வந்தாலும், கொப்பரைக்கு தட்டுப்பாடு நிலவுவதால் தேங்காய் எண்ணெயின் விலை நாளுக்கு நாள் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதன்படி தஞ்சையில் தேங்காய் எண்ணெய் விலை கடந்த 2 மாதத்திற்கு முன்பு 16 கிலோ எடை கொண்ட ஒரு டின் ரூ.5000க்கு விற்கப்பட்டது. தற்போது அதன் விலை படிபடியாக உயர்ந்து ரூ.6100-க்கு விற்கப்படுகிறது.

தஞ்சையில் உள்ள ஒரு மொத்த விற்பனை கடையில் ஒரு லிட்டர் கடலை எண்ணெய் ரூ.160, தேங்காய் எண்ணெய் ரூ.400, சூரியகாந்தி ரூ.135, நல்லெண்ணெய் ரூ.300, விளக்கெண்ணெய் ரூ.190 போன்ற விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article