பழனி - கொடைக்கானல் சாலை ஏழாவது கொண்டை ஊசி வளைவு 500 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலா செல்லும்பகுதிகளில் மிகவும் பிரபலமானதும் குளிர்ந்த சூழலை அனுபவிக்க தமிழகத்தில் அதிகளவில் மக்கள் விரும்பக்கூடிய பகுதியாக விளங்குவது கொடைக்கானல். திண்டுக்கல்-வத்தலக்குண்டு வழியாக கொடைக்கானல் செல்லலாம். இதேபோல் திண்டுக்கல், பழனி சென்று பழனி மலைவழிச்சாலையாக கொடைக்கானல் செல்லும் சாலையும் உள்ளது. கொடைக்கானலுக்கு அதிகளவில் வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள், இரு வழிகளும், மலை வழிச்சாலை மார்க்கமாவே கொடைக்கானல் செல்ல முடியும்.

NEET UG 2024: நீட் தேர்வு ரத்து இல்லை; வேண்டுமானால் இதைச் செய்யலாம் - உச்ச நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவுகள்

இந்த நிலையில் பழனி - கொடைக்கானல் சாலை ஏழாவது கொண்டை ஊசி வளைவு சவரிக்காடு அருகே நேற்று மாலை தாராபுரத்தை சேர்ந்த ஒப்பந்தகார்ர்களான செந்தில் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த நந்து இருவரும் கொடைக்கானல் சென்று விட்டு பழனி வழியாக தாராபுரம் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே செந்தில் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .

Latest Gold Silver Rate:மாதத்தின் இரண்டாவது நாளும் உயர்ந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

இந்த சம்பவத்தில் நந்து என்பவர் படுகாயமடைந்த நிலையில் தீயணைப்பு துறையினர் கயிறு மூலம் மீட்டனர். கொடைக்கனல் சென்ற திரும்பிய இருவரை அவர்களது குடும்பத்தார்கள் தொடர்பு கொண்டபோது அவர்கள் பற்றிய தகவல் ஏதும் தெரியாததால் உறவினர்கள் காவல் துறையினரிடம் புகார் கூறியதன் அடிப்படையில் அவர்களின் தொலைபேசி எண் சிக்னல் சம்பவ இடத்தை காட்டியதால் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டுள்ளனர்.

Prasanth on Vijay: விஜய் அரசியல் எப்படி? நல்லது செய்கிறாரா? - நடிகர் பிரசாந்த் அதிரடி பதில்

இந்த விபத்து நடந்த பள்ளத்தில் இன்று காலை மீட்பு பணி நடைபெற்ற நிலையில் நந்து என்பவர் காரில் சிக்கிக் கொண்டிருந்ததும். தற்போது கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். பழனி கொடைக்கானல் சாலையில் 500 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.